அமேரிக்கன் கல்லூரி (மதுரை)

India / Tamil Nadu / Madurai / மதுரை / Alagar Koil Road

அமெரிக்கன் கல்லூரி மதுரையில் அமைந்துள்ள மிக பழைமையான கல்லூரியாகும். இது 1881-ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. மதுரையில் 1881 ஆம் ஆண்டு தி அமெரிக்கன் மதுரா மிஷனால் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வரும் ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகும். ஆரம்பிக்கப் பட்ட காலகட்டத்தில் தென் தமிழகத்தின் ஒரே கல்லூரி என்பதும் இந்த கல்லூரியின் தனி சிறப்பு. தொடக்கத்தில் அமெரிக்க ஆசிரியர்களால் நிர்வகிக்கப்பட்ட வந்த கல்லூரி இந்தியச் சுதந்திரத்திற்கு பிறகு பல மாற்றங்களை கண்டது. அதன்பிறகு ஆசிரியர்கள் முதல்வர்கள் என பல மட்டங்களிலும் இந்தியர்கள் சேர்க்கப்பட்டு முற்றிலும் திறமையான உள்ளூர் ஆசிரியர்களால் இன்றுவரை கற்பிக்கப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் பி.ஏ., பிரிவுகளும் அதன் பிறகு பி.எஸ்சி., படிப்புகளும் சேர்க்கப்பட்டன. மதுரைவாசிகள் மத்தியில் மட்டுமல்லாமல் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ளவர்களும் நன்கு அறிந்த கல்லூரியாகவும் இருக்கிறது.

tawp.in/r/11j3
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  9°55'42"N   78°7'57"E
  •  16 கி.மீ
  •  118 கி.மீ
  •  119 கி.மீ
  •  141 கி.மீ
  •  193 கி.மீ
  •  207 கி.மீ
  •  207 கி.மீ
  •  213 கி.மீ
  •  227 கி.மீ
  •  228 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 11 years ago