Pathaleswarar Temple- Thiruvasaga Sthalam (Haridwaramangalam)

India / Tamil Nadu / Ammapettai / Haridwaramangalam / Ammapettai- Avoor road
 temple, Shiva temple, thevara paadal petra sthalam
 Upload a photo

பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் தன்னில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்படுகிறது. இதில் சிவனது பாதத்தையும், திருமுடியையும் யார் முதலில் தரிசிக்கிறார்களோ அவர்களே பெரியவர் என்ற நிபந்தனையில் போட்டி ஆரம்பமாகிறது. பிரம்மா அன்னப்பறவையில் ஏறி திருமுடியை தரிசிக்க கிளம்புகிறார். ஆனால் திருமுடி தரிசனம் கிடைக்கவில்லை. அப்போது சிவனின் தலையிலிருந்து தாழம்பூ கீழே வந்து கொண்டிருந்தது. தாழம்பூவை பார்த்த பிரம்மா, தான் சிவனின் திருமுடியைத் தரிசித்ததாக பொய் கூறும்படி சொன்னார். தாழம்பூவும் ஒத்துக்கொண்டது. இதையறிந்த சிவன் தாழம்பூவை பூஜைக்கு உபயோகப்படுத்தக்கூடாது என்றும், பிரம்மனுக்கு பூமியில் கோயில் இருக்க கூடாது என்றும் சபித்தார். விஷ்ணு வராக (பன்றி) அவதாரம் எடுத்து பூமியை குடைந்து சிவனின் திருவடியை பார்க்க முயன்றார். ஆனால் முடியவில்லை. தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். விஷ்ணு இத்தலத்தில் தான் பூமியை துவாரம் போட்டு சிவனின் திருவடி தரிசனம் தேடினார். எனவேதான் இத்தலம் – ஹரி(விஷ்ணு) துவார (பூமியை துளையிடுதல்) மங்கலம்(ஊர்)- “அரித்துவாரமங்கலம்” ஆனது. சிவனின் திருவடி தரிசனம் காண விஷ்ணு பூமியை தோண்டிய பள்ளம் இன்றும் மூலஸ்தானத்தில் உள்ளது. இதை கல்வைத்து மூடியுள்ளார்கள். சிவன் பன்றியின் கொம்புகளுள் ஒன்றை முறித்து, தன் மார்பில் அணிந்து கொண்டதாக வரலாறு கூறுகிறது. சிவனின் “பஞ்ச ஆரண்ய (காடு)” தலங்களில் இதுவும் ஒன்று.

திருக்கருகாவூர் உஷகாலம், அவளிவநல்லூர் காலசந்தி, அரித்துவாரமங்கலம் உச்சிகாலம், ஆலங்குடி சாயரட்சை, திருக்கொள்ளம்புதூர் அர்த்தஜாம பூஜை. இந்த 5 தலங்களையும் ஒன்றாக தரிசிப்பது சிறப்பு.

அரித்துவாரமங்கலத்தில் உள்ள இறைவனை தரிசித்தால் “ஹரித்துவார்” தரிசித்த பலன் கிடைக்கும் என்பர். பாதாள ஈஸ்வரரை தரிசித்தால் கடன் தொல்லை நீங்கும். அம்மன் துர்க்கை அம்சமாக இருப்பதால் துர்க்கைக்கு தனி சன்னதி கிடையாது. சிவனே நவகிரகங்களுக்கு அதிபதியாக இருப்பதால் நவகிரகங்களுக்கு தனி சன்னதி கிடையாது. இவரை தரிசித்தாலே அனைத்து தோஷங்களும் விலகும்.

சிவனுக்கு வலது பக்கம் அம்மன் கிழக்கு நோக்கி இருப்பதால் இதை “கல்யாண கோலம்” என்பார்கள். திருமணம் ஆகாதவர் இங்கு வழிபடுவது சிறப்பு.

இங்குள்ள தெட்சிணாமூர்த்தி சிறப்பு மிக்கவர் இத்தலத்தில் மட்டும் 7 விநாயகர் அருள்பாலிக்கறார்கள்.


மூலவர் சுயம்பு மூர்த்தி. கிழக்கு நோக்கிய 3 நிலை இராஜகோபுரம் உள்ளது.

பிரகாரத்தில் விநாயகர், பதஞ்சலி வியாக்ரபாதருடன் நடராஜர், காசிவிஸ்வநாதர், சனிபகவான், சூரியன், சந்திரன், பைரவர், சம்பந்தர், சுந்தரர், லிங்கோத்பவர், சப்தமாதர்கள் உள்ளனர்.

இறைவன் சன்னதியில் இடதுபுறம் ஓர் வாயில் உள்ளது அதன் வழி வரும்போது விஷ்ணு ஒரு மாடத்தில் உள்ளார்.
வடகிழக்கில் பைரவர், சிறிய அளவிலான லிங்க உருவில் விஸ்வநாதர் விசாலாட்சி உள்ளனர். மற்றும் சூரிய சந்திரர்கள் உள்ளனர்.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 99வது தலம்.

கோயிலின் எதிரில் நாற்புறமும் படிக்கட்டுகளுடன் பெரிய குளம் ஒன்றுள்ளது இது பிரம்ம தீர்த்தம் என அழைக்கப்படுகிறது இந்த கோடையிலும் நீர் நிறைந்து காணப்படுகிறது.

சிலருக்கு ஊரே பெயராகிவிடும் அது போல பிரபல தவில் வித்துவான் பழனிவேல் அவர்களுக்கு இந்த ஊரின் பெயரே அவருக்கு பெயராக மாறிய சிறப்பும் கொண்டது இந்த ஹரித்துவாரமங்கலம் SCN099 haridwaramanagalam.. arathaipperumpaazhi, arathaiperumbaazhi...
Aradhaipperumpazhi (Ariduvaramangalam),, deities - sree alangaravalli samEtha sri baathalEshwarar...

shaivam.org/hindu-hub/temples/place/248/thiruaradhaiper...
temple.dinamalar.com/New.php?id=292
Nearby cities:
Coordinates:   10°49'54"N   79°21'3"E
This article was last modified 8 years ago