Appurajapuram- Putthur sivan temple (PUTHUR)

India / Tamil Nadu / Vaithiswarankoil / PUTHUR / Thalaichangadu-thiruchempalli road
 temple, Shiva temple

தலைச்சங்காடு- திருசெம்பள்ளி சாலையில் சென்று சற்று தெற்கில் திரும்பினால் உள்ளது அப்புராஜபுரம் புத்தூர்.

ஒரு பெரிய குளக்கரையின் கிழக்கு கரையில் உள்ளது கோயில்.
கிழக்கு நோக்கிய கோயில் எனினும் வாயில் மேற்கில் உள்ளது. சிறிய கோயில் எனினும் மக்களின் தொடர்வழிபாட்டில் உள்ளது.

இறைவன் சிறிய லிங்க உருவுடன் உள்ளார்.அம்பிகையும் அவ்வாறே. இந்த தலத்தில் இறைவனை முசுகுந்த மகரிஷி வழிபட்டு அருள் பெற்றார் என்பது வரலாறு. இறைவனின் எதிரில் முசுகுந்தர் சிறிய சிலை வடிவில் உள்ளார்.

விநாயகர், முருகன் சண்டேசர் சிறிய சிற்றாலயங்களில் உள்ளனர். நவகிரகங்கள் ஒரு தேர் வடிவ மண்டபத்தில் உள்ளனர். தென் கிழக்கில் லட்சுமி நாராயணர் சன்னதியும் உள்ளது.

இறைவன்- விசுவநாதர்
இறைவி-விசாலாட்சி
Nearby cities:
Coordinates:   11°6'59"N   79°47'21"E
This article was last modified 8 years ago