வடகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 24Hr (வடகாடு) | மருத்துவமனை

India / Tamil Nadu / Alangudi / வடகாடு

இந்த அரசு ஆரம்ப சுகாதார மையம் சுமார் 3கோடி செலவில் 32 படுக்கைகள் கொண்டதும்,பிரசவ வசதியும் அறுவை சிகிச்சை அரங்கமும் கொண்ட மருத்துவமனையாகும்.மருத்துவமனையின் பரப்பளவு அளவானது சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பாகும்.வடகாடு மற்றும் இந்த கிராமத்தை சுற்றியுள்ள சுமார் 10 கிராமங்கள் இந்த மருத்துவமனையின் மூலம் பயனடைகிறார்கள்(பொது மருத்துவம்,நாட்பட்ட வியாதி மற்றும் குழந்தைபேறு).இந்த மருத்துவமனையின் ஆரம்பகால(1997) கட்டிடப்பணியில் சேர்வைகாரன்பட்டி துடிப்பான இளவட்டங்கள் ஈடுபட்டிருந்தனர்.இந்த இடம் ஒரு காலத்தில் சேர்வைக்காரன்பட்டி முத்துசேர்வை குடும்பத்தார்க்கு மட்டுமே சொந்தமாக இருந்தது(தற்போது 10 குடும்பங்களாக பிரிந்துள்ளார்கள்)நாளடைவில் அவர்களுக்குள் ஏற்பட்ட சச்சரவுகள் காரணமாக அரசாங்கத்திற்கு கொடுத்துள்ளார்கள்(தோராயமாக 1955).(இந்த இடத்தின் பழைய பெயர் மாங்கொல்லை சுமார் 150மாமரங்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது.அதற்கான சான்று இன்றும் இந்த இடத்திற்கு அருகில் ஒரு பழமையான மாமரம் உள்ளது)
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°20'59"N   79°3'4"E
  •  115 கி.மீ
  •  174 கி.மீ
  •  231 கி.மீ
  •  302 கி.மீ
  •  352 கி.மீ
  •  385 கி.மீ
  •  408 கி.மீ
  •  417 கி.மீ
  •  426 கி.மீ
  •  515 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 15 years ago