திருக்குற்றால நாதர் ஆலயம், குற்றாலம்

India / Tamil Nadu / Courtalam / Main Falls Lane
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

PNT13 - ஸ்ரீகுழல்வாய்மொழியம்மை மற்றும் ஸ்ரீபராசக்தி சமேத ஸ்ரீதிரிகூடாச்சலேஸ்வரர் எனும் குற்றாலநாதர் ஆலயம், திருக்குற்றாலம் எனும் திரிகூடாச்சலம் 13வது பாண்டியநாட்டுத் தேவாரத்தலம்.குறும்பலா எனும் தல மரத்தின் காரணத்தால், இப் பெயர் பெற்றது.இத்தலவிநாயகர் வல்லபகணபதி.அருவி அருகே இருக்கும் செண்பக விநாயகர் பிரசித்தி பெற்றவர்.பிரகாரத்திலுள்ள முருகன், கையில் வில்லேந்தியபடி காட்சி தருகிறார். இவருடன் வள்ளி, தெய்வானை இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்தபடி இருக்கின்றனர்.SkPT - சக்தி பீடங்களில் இது 'பரா' சக்தி பீடம்.TPuT - திருப்புகழ் திருத்தலம்.PT bhoomi dhOsham - சொந்த வீடு மற்றும் மனைகள் அமைய இங்கு வணங்கலாம்.பராசக்தி, இங்கு ஸ்ரீசக்ர அமைப்பிலுள்ள பீடத்தின் வடிவில் காட்சி தருகிறாள். பூமாதேவியாக இருந்து மாறிய அம்பிகை என்பதால் "தரணி பீடம்' வணங்க பூமி,நிலம் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும்.PST05 - பஞ்ச சபைகளில் இது சித்ரசபை., குற்றால நாதர் கோயில் அருகே அமைந்துள்ளது. KyWT - கலியுகத்திலும் அதிசயமான தலம்,இத்தலத்தில் உள்ள தலமரம் லிங்க வடிவ பலாச்சுளை காய்ப்பது கலியுக அதிசயம்!PT headache - கொடுமையான தலைவலியை போக்கும் ஆலயம், இங்கு அர்த்தஜாம பூஜையில் வழங்கப்படும் கஷாயம் மிகுந்த மருத்துவ குணம் வாய்ந்தது.PT Paronia - சித்தபிரமை குணமாக வணங்க வேண்டிய ஆலயம்.PT Skin diceases - தோல் வியாதிகளை போக்கும் பரிகார தலம், ( ஸ்தல வரலாறு)! குடுநீ நைவைத்யம்,தைல அபிஷேகம் (மருந்துக் கஷாயம்) பெருமானுக்கு உண்டு! இந்த பிரசாதங்கள் தீராத நோய்களையும் தீர்க்கும் மருந்தாகும்!
இலஞ்சி முருகப் பெருமானின் யோசனைப்படி வைணவக் கோலம் பூண்டு அகத்தியர் இங்கு திருமால் தலத்தை, சிவத்தலமாக மாற்றியபோது சுவாமிக்கு வலப்புறம் இருந்த ஸ்ரீதேவி, குழல்வாய்மொழிநாயகியாகவும், பூதேவி, பராசக்தியாகவும் மாற்றினார். MuVT - மூலவர் விஷேச ஆலயம், குற்றாலநாதர் லிங்கத்தின் மீது, அகத்தியரின் விரல் பதிந்த தடங்கள் தற்போதும் இருக்கிறது. முற்காலத்தில் சிவன் சன்னதியில் இருந்த பெருமாளே, இங்கு "நன்னகரப்பெருமாள்' என்று எழுந்தருளி இருக்கிறார்! இலஞ்சியில் அகத்தியர் பூஜித்த சிவன், "இருவாலுக நாயகர்' என்ற பெயரில் அருளுகிறார். குற்றாலநாதரை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள், முதலில் இலஞ்சியில் முருகப் பெருமானையும், இருவாலுக நாயகரையும் தரிசித்துவிட்டு இங்கு வருவது விசேஷ பலனைத் தரும்.
temple.dinamalar.com/New.php?id=601
shaivam.org/hindu-hub/temples/place/91/thirukuttralam-k...
Location:தென்காசியில் இருந்து 5 கி.மீ., தூரத்தில் குற்றாலம் கோயில் அமைந்துள்ளது. தமிழகத்தின் எந்த பகுதியிலிருந்தும் எளிதில் குற்றாலத்திற்குச் செல்லலாம். மதுரையிலிருந்தும் (155 கி.மீ) திருநெல்வேலியிலிருந்தும் (60 கி.மீ)! From madurai 155kms!
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  8°55'51"N   77°16'10"E
  •  45 கி.மீ
  •  62 கி.மீ
  •  81 கி.மீ
  •  89 கி.மீ
  •  143 கி.மீ
  •  175 கி.மீ
  •  204 கி.மீ
  •  221 கி.மீ
  •  248 கி.மீ
  •  262 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 4 years ago