ஸ்ரீகபாலீஸ்வரர் கோயில், மைலாப்பூர்,மயிலை (சென்னை)

India / Tamil Nadu / Nerkunram / சென்னை / RK Mutt Road
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

TNT24 - ஸ்ரீகற்பகாம்பாள் சமேத ஸ்ரீகபாலீஸ்வரர் ஆலயம், திருமயிலை இப்போது மயிலாப்பூர் 24வது தொண்டை நாட்டுத் தேவாரத்தலம்.உமாதேவி, இறைவனை, மயில் வடிவங்கொண்டு பூஜித்த காரணத்தாலேயே மயிலையாம். கோவில் கபாலீச்சவரம்.'மயிலாப்பு என பதிகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்தல விநாயகர் ஸ்ரீநர்த்தன விநாயகர். TPuT - திருப்புகழ் திருத்தலம்.PT Ayush dhosham- ஆயுள் தோஷம் நீக்கும் திருத்தலம்,சிவநேசச் செட்டியார் என்ற அன்பரின் மகளாகிய பூம்பாவை, அரவு தீண்டி இறந்துபட, அவள் உடலை எரித்து, எலும்பையும் சாம்பலையும் ஒரு குடத்தில் அவரது தந்தையார் வைத்திருந்தார். அதை, அங்கெழுந்தருளிய சம்பந்தர் முன்வைக்க, அவர் "மட்டிட்ட புன்னை" என்ற பதிகம் பாடிப் பெண்ணுருவாக்கியருளினார்.AvrT / MukT - அவதார மற்றும் முக்தித் தலம்,வாயிலார் நாயனார் இங்கு அவதரித்து முக்தி பெற்றார்.பேயாழ்வாரும்,திருவள்ளுவ நாயனாரும் இங்கே பிறந்ததாக கூறப்படுகிறது. PT Health - உடல் நோய்களைப் போக்கும் தலம்,நோய்கள் தீர அறுபத்துமூவர் திருவிழாவின் எட்டாம் நாளில் மண்பானையில் சக்கரை விநியோகம் செய்ய வேண்டிக் கொள்கிறார்கள்.வள்ளி தெய்வானை யானை மீதமர்ந்து தரிசனம் தருகிறார்கள்.கற்பகவல்லி மிகுந்த வரப்ரசாதியானவள்.சுக்கிரன் வணங்கிய இறைவரும் கூட.
ஆலயத் தகவல்: இப்போதுள்ள ஆலயம் சுமார் 300 ஆண்டுகள் மட்டுமே பழமையானது. இதற்கு முன்னிருந்த 2000 ஆண்டுகள் பழமையான திருக்கோயில் கடற்கரையில் அமைந்திருந்தது.("ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலை", "மாசிக் கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்" - சம்பந்தர், "கடலக்கரை திரையருகே சூழ் மயிலைப் பதி உறைவோனே" - திருப்புகழ்). பழைய திருக்கோயில் ஐரோப்பியர்களால் இடிக்கப்பட்டு, கிறித்தவ பள்ளிகளும், சாந்தோம் சர்ச்சும், கோட்டைகளும் அமைத்துக் கொண்டார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் டாலமி (Ptolemy) என்ற கிரேக்க ஆசிரியர் இயற்றிய பூகோள நூலில் Malliarpha எனப்படுவதே மயிலாப்பூர் என்று Vestiges of Old Madras Vol. - I chapter 23-ல் ஆசிரியர் H.D. Love கூறுகிறார்.
temple.dinamalar.com/New.php?id=628
shaivam.org/hindu-hub/temples/place/191/thirumylapore-k...
அமைவிடம்: மயிலை சென்னையின் முக்கியப் பகுதி.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  13°2'1"N   80°16'11"E
  •  33 கி.மீ
  •  373 கி.மீ
  •  484 கி.மீ
  •  569 கி.மீ
  •  614 கி.மீ
  •  624 கி.மீ
  •  651 கி.மீ
  •  921 கி.மீ
  •  926 கி.மீ
  •  1007 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago