Erukattaancherry Siva temple (Erukkattanchery)

India / Tamil Nadu / Tharangambadi / Erukkattanchery / Tharangampadi Road - towars Karaikal, Nagai
 Shiva temple  Add category

திருக்கடையூர்- பொறையாறு சாலையில் உள்ளது எருக்கட்டான்சேரி எனப்படும் எழுப்பிவிட்டான் சேரி

திருக்கடவூரில் இறைவன் யமனை சம்ஹாரம் செய்கிறார். அதனால் பூமியில் உயிர்கள் மரணிப்பதில்லை என ஆகிறது, இதனால் பூமி பாரம் தாங்க முடியாமல் பூமாதேவி இறைவனிடம் முறையிடுகிறாள். இறைவனும் யமனுக்கு மன்னிப்பு அளித்து உயிர்ப்பிக்கிறார். அந்த இடமே எழுப்பிவிட்டான் சேரி தற்போது எருகட்டான்சேரி என வழங்கப்படுகிறது.

இதனால் திருக்கடையூருக்கு வரும் பக்தர்கள் திருக்கடையூர் இறைவனை வணங்கி பின் அங்குள்ள அமிர்தநாராயண பெருமாளையும் வணங்கி பின் இந்த எருக்கட்டான்சேரி இறைவனையும் வழிபட்டால் தான் முழுமையான பலனை அடைய முடியும். ஒருவேளை நீங்கள் இதனை செய்ய இயலவில்லைஎன்றால் மீண்டும் நேரே இங்கு வந்து இறைவன் காலகாலேஸ்வறரை வணங்கி பலன் பெறலாம்.
கோயில் பெரிதாய் மூன்று ஏக்கர் பரப்பில் உள்ளது. நடுவில் கிழக்கு நோக்கி கோயில் கொண்டுள்ளார் இறைவன். அம்பிகை தெற்கு நோக்கி அருகில் உள்ளார்.

கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது அதன் எதிரில் கொடிமரம், நந்தி, பலிபீடம் என உள்ளது. அருகில் தெற்கு நோக்கிய பெரிய கூம்பு வடிவ மண்டபம் உள்ளது இதில் சிறிய அளவிலான சித்தி விநாயகர் உள்ளார். இதனால் இது சித்தி விநாயகர் மண்டபம் என அழைக்கப்படுகிறது. கோபுர வாயிலை தாண்டியதும் இடது புறம் தல வரலாற்றினை நினைவூட்ட மார்கண்டேயன் சிலையும் யமனின் சிலையும் உள்ளது( இவை தற்போதைய திருப்பணியில் வைக்கப்பட்டவை)

கருவறை வாயிலில் இரு சுதை துவாரபாலகர்கள் உள்ளனர். இறைவன்காலகாலேஸ்வரர் நடுத்தர அளவிலான லிங்க மூர்த்தியாக உள்ளார். அம்பிகை நீலயதாட்சியும் சிறிய அளவிலான வடிவில் உள்ளார்.

கருவறை கோட்டங்களில் விநாயகர், தென்முகன் அழல்முகன், நான்முகன், துர்க்கை என உள்ளனர். கோயில் பிரகாரத்தின் மூன்று புறங்களிலும் திருமாளிகை பத்தி உள்ளது. கிழக்கு நோக்கிய மேற்கு பத்தியில் விநாயகர், நர்த்தன விநாயகர், பெருமாள், பூமாதேவி, மகாலட்சுமி, சரஸ்வதி உள்ளனர். வடகிழக்கில் நடராஜர் சன்னதியில் ஒரு அகல் மட்டும் எரிந்து கொண்டிருக்கிறது, இறைவன் அரூபமாய் இருக்கிறார் போலும், நவகிரகங்களும், ஈசான்ய ஈசன் எனும் பெயரில் லிங்கமொன்று உள்ளது. அருகில் பைரவர், சூரியன் உள்ளனர்.
Nearby cities:
Coordinates:   11°2'22"N   79°49'58"E
This article was last modified 8 years ago