அருள்மிகு ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில், நாமக்கல் | கோவில், மதம், இந்து கோவில்

India / Tamil Nadu / Namakkal /
 கோவில், மதம், இந்து கோவில்

மிகப் பிரசித்தி பெற்ற நரசிம்மர் ஆலயம். இவ்வாலயம் ஒரு குடைவரைக் கோவில்.CRT - சாதி அரசியலைக் கேள்வி கேட்கும் திருத்தலம்,பெருமானின் கருவறைக்கு உள்ளே வரை வித்தியாசம் இல்லாமல் பக்தர்கள் அனைவரும் சென்று தரிசித்து வழிபடலாம்.FSAT - சிற்பம் மற்றும் கலைகளுக்காக பிரசித்தி பெற்ற திருக்கோவில்.கருவறையின் மூர்த்தங்கள் நம்மை ஆச்சரியப் படவைக்கும் 3D தொழில்நுட்பம் போல செதுக்கப் பட்டுள்ளளன.கோவிலின் எதிரே இருக்கும் நாமக்கல் ஆஞ்சநேயரின் திருப்பார்வை இமூர்த்தியின் மேல் எப்போதும் விழுந்து கொண்டே இருப்பதால் மிகப் பெரிய வரப்பிரசாதி.உலகப்புகழ் பெற்ற கணிதமேதை இராமானுஜர் இங்கு வீற்றிருக்கும் நாமகிரித் தாயார் அருளால் தான் தனது மேதைமையைப் பெற்றார்.VPAT - ஸ்ரீவியாசராஜ தீர்த்தர் பிரதிஷ்டை பண்ணிய ஆஞ்சநேயர் தலம்.வலது வீர கரமும், இடது கரத்தில் சௌகந்திகா மலருடனும்,இடையில் கத்தியுடனும் தலைக்கு மேல் வலஞ்சுழியாக சுழற்றிய வாலில் மணியுடனும் நின்ற ஒரே மாதிரி கோலத்தில், தேசமெங்கும் ஸ்ரீவியாசராஜர் 1000 ஆஞ்சநேய மூர்த்திகளை நிர்மாணம் செய்துள்ளார்.ஸ்ரீமகாலக்ஷ்மியின் அருள் பெற்று, விஜய நகர இந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்த மகான் அந்நிய மதங்களின் கொடுமைகளில் இருந்து நமது ஹிந்து தர்மத்தைக் காக்கவே இந்த அருமையான செயலைச் செய்துள்ளார்.எனவே இவ்வாலயம் HRRT - இந்து மத மறுமலர்ச்சிக்காக வணங்க வேண்டிய திருத்தலம் ஆகும்.பக்தர்கள் இக்கோல அனுமந்த மூர்த்தியை எங்கு கண்டாலும் நமது ஹிந்து தர்மத்திற்காக வேண்டிக் கொள்வதோடு மாப்பிலும் 'VPAT' என்று குறிக்கும் படி வணங்கி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாலயத்தில் இம்மூர்த்தி ஸ்ரீகிருஷ்ணர் சந்நிதியின் இடது பக்க சுவரில் வீற்றிருக்கிறார்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°13'20"N   78°9'51"E
  •  60 கி.மீ
  •  217 கி.மீ
  •  238 கி.மீ
  •  266 கி.மீ
  •  419 கி.மீ
  •  711 கி.மீ
  •  949 கி.மீ
  •  1046 கி.மீ
  •  1094 கி.மீ
  •  1260 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 6 years ago