ஈரோடு

India / Tamil Nadu / Erode /

ஈரோடு எனும் சொல்லானது ”இரு ஓடை” எனும் இரட்டை சொற்றிகளிலிருந்து வந்ததாக கூறுகின்றனர்.

ஈரோடு கைத்தறி, விசைத்தறி ஜவுளி பொருட்கள் மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரிப்பிற்கு புகழ் பெற்றது. எனவே இது இந்தியாவின் கைத்தறி நகரம் எனவும் பாரதத்தின் ஜவுளி நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.

புராணம்:-
சூரம்பட்டியின் பெரும்பள்ளமும், பிராமண பெரிய அக்ரஹாரம் மற்றும் காசிபாளையத்தின் காளிங்கராயன் கால்வாய் பகுதியும் தற்போது ஈரோடு மாநகராட்சிப்பகுதியின் எல்லைகளாக திகழ்கின்றன. ஆனால் பழைய ஈரோடு நகராட்சியில் கால்வாய்கள் ஏதுமில்லாமல் இருந்தது.
பைரவ புராண விளக்கவுரையில், சிவனின் மாமனாரான தட்சன், தாம் நடத்திய யாகத்திற்கு தமது மருமகனான இறைவன் சிவனை கூப்பிடவே இல்லை, அவரது மனைவி தட்சாயினி தமது கணவர் விருப்பத்திற்கு எதிராக யாகத்திற்கு வந்தாள், யாகத்தில் தமது கணவரை தந்தை இழிவுபடுத்தியதால் மனமுடைந்து திரும்பினாள். மேலும் அவள் சிவனிடம் திரும்பியபின் சிவன் கோபமுற்று தட்சாயினியை எரித்ததார் எனக்கூறுகிறது. அதை கேட்ட பிரம்மா தன் ஐந்தாவது தலையை துண்டித்தார். அந்த மண்டை ஓடு சிவனை ஒட்டிக்கொண்டு பிரம்மதோஷம் பிடித்தது. பிரம்மதோஷத்தின் காரணமாக சிவன் இந்தியா முழுவதும் சுற்றினார். அப்போது ஈரோடு வந்து போது இங்குள்ள கபால தீர்த்தத்தில் நீராடியதால் மண்டை ஓடு சிதைந்தது. இந்த மண்டை துணுக்குகள், ஈரோட்டினை சுற்றியுள்ள வெள்ளோடு (Vellode ("வெள்ளை மண்டை")), பேரோடு (Perode ("பெரிய மண்டை")) மற்றும் சித்தோடு (Chithode ("சிறிய மண்டை")) ஆகிய இடங்களில் விழுந்ததாக கூறுகிறது. அவற்றின் பெயர்களும் முன்னுதரணமாக அமைந்துள்ளன. கபால தீர்த்தமானது ஆருத்ர கபாலீஸ்வரர் கோயிலின் இடதுபுறத்தில் உள்ளதை இன்றும் காணலாம். கையொப்பமிடப்பட்டுள்ளது உள்ளது. மேற்கண்டவாறு வரலாற்றினை பைரவ புராணமானது விளக்குகிறது. வைஷ்ணவர் அவதாரங்களில் குறிப்பிடத்தக்க அவதாரமான கூர்ம அவதாரத்திற்கான அடித்தளமாக இது திகழ்வதாக சான்றுகள் உள்ளன.

வரலாறு:-
ஈரோடு நகரமானது உள்ளூர் கங்கை வம்ச அரசர்களான சேர மன்னர்கள் மற்றும் மேற்கு கங்கை வம்ச அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. தாராபுரமானது அவர்களின் தலைமையகமாக திகழ்ந்தது. சோழர்கள் ஆட்சியிக்கு பின்னர், முஸ்லிம்கள் (மோடின் சுல்தான் (Modeen Sulthans)) மதுரை நாயக்கர்களின் கீழ் ஆட்சிபுரிந்தனர்.......


....பண்டைய கொங்கு கால வரலாற்றின் படி சங்க கால கொங்கு பகுதியின் ஒரு பாகமாகவே ஈரோடு திகழ்ந்தது. இராஜ ராஜ சோழனின் ஆட்சியின் கீழ் இப்பகுதியினை ராஷ்ட்ராகுட்டாக்கள் கோசம்புதுரினை தலைமை இடமாக கொண்ட கோசாரஷ் என்ற துருப்புகள் எடுத்துக் கொண்டனர். அவர்கள் கோவையில் பயிற்சி பெற ஏதுவாக தங்கும் பகுதியாக பயன்படுத்தினர். இதை சாளுக்கியர்கள் தங்கள் பகுதியாக்கி கொண்டனர். பின்னர் மதுரை பாண்டிய மன்னர்களும் ஒய்சாளர்களும் தனதாக்கி கொண்டனர்.
ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE...
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°21'27"N   77°41'59"E
  •  56 கி.மீ
  •  168 கி.மீ
  •  210 கி.மீ
  •  215 கி.மீ
  •  368 கி.மீ
  •  698 கி.மீ
  •  911 கி.மீ
  •  1008 கி.மீ
  •  1059 கி.மீ
  •  1224 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 12 years ago