Sree Brammapureeswarar Temple, ambal periya kOyil, ambar perundh thirukOyil, (Ambal)

India / Tamil Nadu / Peralam / Ambal / ambal karaikkalroad
 Shiva temple, thevara paadal petra sthalam

SCN054 - sree brahmapureeswarar along with sugandha kundhalAmbikai temple ambar perunthirukOyil is 54th thEvAra temple of chOzha dhEsh(nAdu) located in south shore of the river cauvEri.TPuT - thirupugazh temple.MdKT - one of the 72 mAdak kovil temples built by king sree kOtchengat chOzhan.AvrT - avathAra means birth place of sree sOmAsimAra nAyanAr.This temple also ref with ambarmAhALam. vaishnavi thAyAr temple is near west to this temple. dont miss, and there sthoobis prathishta on 6crores sreerAma nAmA's!
temple.dinamalar.com/en/new_en.php?id=964
Location: Amparperuntirukkoil About 1km east from ambar mAhALam ppt and 5kms east to poonthottam railway station.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம்,அம்பல் பிரமபுரீசுவரர் கோயில்
பிரமபுரீசுவரர் கோயில், அம்பர் பெருந்திருக்கோயில் என பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த சிவாலயம் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 54ஆவது சிவத்தலமாகும்.
மயிலாடுதுறை - திருவாரூர் சாலை மார்க்கத்தில் மயிலாடுதுறையிலிருந்து 23கி.மீ தொலைவில் உள்ள பூந்தோட்டம் எனும் இடத்தில் இருந்து காரைக்கால் செல்லும் சாலையில் 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. தற்போது 'அம்பல்' என்று வழங்கப்படுகிறது..
இறைவன்- பிரமபுரீசுவரர்
இறைவி- சுகந்த குந்தளாம்பிகை, பூங்குழலம்மை
தலமரம் - புன்னை மரம்
தீர்த்தம் -பிரம தீர்த்தம்
பதிகம் - திருஞானசம்பந்தர் – 1
இவ்வூரில் மூன்று பெரும் சிவாலயங்கள் உள்ளன, பிரம்மபுரீஸ்வரர், மாகாளேஸ்வரர், சட்டநாதர். பிரதான சாலையில் இக்கோயில் இரண்டாவதாக உள்ளது.
இக்கோயில் ஒரு மாடக்கோயில் அமைப்பாகும், கோச்செங்கட் சோழநாயனாரால் கட்டப்பெற்றவைகளுள் அம்பர்ப்பெருந் திருக்கோயிலும் ஒன்றாகும்.
இச்செய்தியை ஞானசம்பந்தப் பெருந்தகையார்
`குரிசில் செங்கண்ணவன் கோயில்` `செங்கண் நல்லிறை செய்த கோயில்` `செம்பியர் செறிகழல் இறை செய்த கோயில்` என இவ்வூர்ப்பதிக அடிகளில் கூறியுள்ளனர்.
எனவே அம்பர் என்னும் ஊரில் யானை ஏற முடியாதவாறு படிக்கட்டுக்கள் அமைத்துச் செய்குன்றுபோல் கோச்செங்கட் சோழ நாயனரால் கட்டப்பெற்ற காரணம் பற்றி அம்பர்ப்பெருந்திருக்கோயில் என்னும் பெயர் பெற்றது.
அரிசிலம் பொருபுனல் அம்பர்` (அரிசில் - அரிசிலாறு) `அறைபுனல் நிறைவயல் அம்பர்` `அங்கணி விழவமர் அம்பர்` `பைம்பொழில் நிழல்வளர் நெடுநகர்` என்னும் ஞானசம்பந்தரது திருப்பதிக அடிகளால் இவ்வூரின் சிறப்பு நன்கு விளங்கும்.
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இத் தலத்திற்குப் புராணம் பாடியுள்ளார்
கோயிலின் நுழைவாயிலில் மூன்று நிலைகளையுடைய ராஜகோபுரம் உள்ளது. அடுத்து கொடி மரம், பலி பீடம், நந்தி ஆகியவை உள்ளன. அடுத்து சுதையால் ஆன பெரிய நந்தி உள்ளது. திருச்சுற்றில் படிக்காசு விநாயகர், சோமாசிமாறர், சுசீலா ஆகியோர் உள்ளனர்.
கோயிலின் தரை தளத்தில் இறைவனுக்கு இடது புறத்தில் சுகந்த குந்தளாம்பிகை எனப்படும் பூங்குழலி அம்மன் சன்னதி தெற்கு நோக்கியபடி உள்ளது.
தரை தளத்தில் திருச்சுற்றில் ஸ்தல விநாயகர்,மூன்று விநாயகர் சிலைகள் உள்ளன. சுப்ரமணியர், ஐயப்பன், மகாலட்சுமி ஆகியோருக்கு தனி சிற்றாலயங்கள் உள்ளன.
மேல் தள கோஷ்டத்தின் நேர் கீழே உள்ள கோட்டத்தில் தென்முகன் விஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. அடுத்து ஜம்புகேஸ்வரர் சன்னதி உள்ளது. அதற்கு முன்பாக நந்தியும், பலிபீடமும் உள்ளன.
மாடக்கோயிலின் 12 படிகளேறி மேலே சென்றால் உயர்ந்த தளத்தில் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் உள்ளார். மூலவருக்கு முன்பாக நந்தியும் பலிபீடமும் உள்ளன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி உள்ளார்.
கருவறை செல்லும் பாதையில் மேற்கு நோக்கியபடி சிறிய நந்தி, விநாயகர், பாலசுப்ரமணியர், கோச்செங்கட்சோழர், சம்பந்தர், அப்பர், பிரம்மா, நின்ற கோலத்தில் சரஸ்வதி, ஆகியோர் உள்ளனர்.
நவக்கிரகம் கருவறையின் இடது புறம் உள்ளது இறைவனுக்கு வலது புறம் கிழக்கு நோக்கிய சோமாஸ்கந்தர் சன்னதி உள்ளது. இதற்க்கு எதிரில் உள்ள சுவற்றில் பைரவர் சிற்பம் உள்ளது.
இத்திருக்கோயிலில் நான்கு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவற்றுள் சோமாஸ்கந்தர் கோயிலில் இருக்கும் இராஜராஜ சோழதேவரின் பத்தாமாண்டுக் கல்வெட்டு நீங்கலாக ஏனையவை துண்டு துண்டான கற்களில் வெட்டப்பெற்றனவாகும்.
மேற்குறித்த இராஜராஜ சோழதேவரின் கல்வெட்டு உய்யக்கொண்டார் வளநாட்டு, அம்பர் நாட்டு வைகாவூராகிய எதிரிலிச் சோழநெற்குன்றத்தில் எழுந்தருளியிருக்கும் எதிரிலிச்சோழீச்சர முடையார்க்கு அம்பர் என்னும் இவ்வூரிலுள்ள ஒரு வணிகன் இரண்டு விளக்குகள் கொடுத்ததைத் தெரிவிக்கின்றது.
ஏனைய துண்டுக் கல்வெட்டுக்கள் இராஜராஜ தேவரின் ஐந்து, ஒன்பது இராச்சிய ஆண்டுகளில் நிலங்கள் ஏலத்திற்கு விடப்பட்டதையும், மூன்றாங்குலோத்துங்க சோழன். மதுரையும், ஈழமும், கருவூரும், பாண்டியன் முடித்தலையும் கொண்டதையும், அம்பர் நாட்டில், மேலூராகிய அரித்துவநெற்குன்றம் என்னும் ஊர் உள்ளதையும் தெரிவிக்கின்றன.
ஆதியில் இத்தலம் நைமி சாரண்யம் என வழங்கப்பட்டு வந்தது, இறைவன் சுயம்புவாக இருக்கிறார் என்பது நம்பிக்கை , இறைவன் மரம் செடிகொடியாகவும் உள்ளார் அதனால் வேத கால ரிஷிகள் இங்கு அமைதியாக தவம் செய்வதை விரும்பினர்.
இப்படி யுகம் தாண்டியும் சிவத்தலமாக விளங்கும் அம்பல் திருத்தல மண்ணில் கால் வைப்பதே நாம் செய்யும் பூர்வஜென்ம புண்ணியம் என கூறலாம். தலம் தீர்த்தம், விருட்சம், லிங்கம் என அனைத்தையும் ஒருங்கே தரிசிக்க வாரீர்.
www.facebook.com/media/set/?set=a.2440605999345829&...
Nearby cities:
Coordinates:   10°55'1"N   79°40'59"E
This article was last modified 12 months ago