11.Alathur sivan temple

India / Tamil Nadu / Peralam / thirumeeyachchoor to thirupampuram road
 temple, Shiva temple

இந்திராதி தேவர்கள் அசுரர்களிடம் தோற்றுப்போய் தலைமறைவாய் வாழ்ந்த காலத்தில், அசுரர்கள் கண்ணில் சிக்காமல், அவர்கள் தொந்தரவுக்கு ஆளாகாமல், பல தலங்கள் சென்று இறைவனை வணங்க முடிவு செய்த தேவர்களும் ரிஷிகளும் எறும்பாக மாறி ஈசனை துதித்தார்கள். இவர்களின் பக்தியால் மனம் கனிந்த ஈசன் அவர்களுக்குக் காட்சி தந்து அருளினார். எறும்புகளுக்கு அருளியதால், எறும்பீஸ்வரர் என்றானார்.


800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 11 ஆலத்தூரில் அமைந்திருக்கிறது. பேரளம்- திருப்பாம்புரம் சாலையில் மூன்று கிமி தூரம் சென்றால் இந்த ஆலத்தூர் அடையலாம். பல ஆலத்தூர்கள் உள்ளதால் இது 11.ஆலத்தூர் எனப்படுகிறது.

இறைவி-சௌந்தர்ய நாயகி இறைவன்- பீபிலிகாதீஸ்வரர் - எறும்பீஸ்வரர்
பீபிலி என்றால் எறும்பு

கம்பீரமாக சோழர்களின் பெருமையை பறைசாற்றி நின்ற கோயில் பிற்காலத்தில் பழுதடைந்து, ராஜகோபுரம் இடிந்து கருவறை + மண்டபங்கள் மட்டும் எஞ்சி நின்றபோது சமீப காலத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டன.

முகப்பு கோபுரம் இல்லை, பறந்து விரிந்த வளாகம். கிழக்கு நோக்கிய இறைவன் அம்பிகை தெற்கு நோக்கி உள்ளார், பெரிய மண்டபம் இரு ச்ன்னதிகளியும் இணைக்கிறது. இறைவன் சன்னதி வாயிலில் விநாயகரும் முருகனும் உள்ளனர். தென்புறம் சிறிய சன்னதியாக நால்வர் உள்ளனர்.

கருவறை சோழர்காலத்தியது. அதில் தென்முகன் சிலையினை ஒட்டியவாறு ஒரு சோழ கல்வெட்டு உள்ளது. (அதனை யாராவது படித்து சொல்லுங்களேன்)

கருவறை கோட்டத்தில் விநாயகர், தென்முகன், லிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை உள்ளனர். பிரகாரத்தில் விநாயகர், முருகன், காசிவிஸ்வநாதர், லட்சுமி ஆகியோருக்கு சிற்றாலயங்கள் உள்ளன. வடகிழக்கில் நவகிரகங்களும், பைரவர், சனி சூரியனும் உள்ளனர்.
Nearby cities:
Coordinates:   10°57'41"N   79°38'11"E

Comments

  • sir , there is no temple here this location! The actual(!) location of sirukudi temple is marked at thirupApuram which was also wrongly mentioned! pls check this and let confirm!
This article was last modified 6 years ago