sree subramaniya swAmy temple,perambur (Perambur)

India / Tamil Nadu / Mayiladuthurai / Perambur / Mangainallur- Thiruvilaiyattam Road
 temple, Murugan temple

TVT219 - sree Anandhavalli samEtha sree brammapureeswarar temple, pirambil now known as permaboor is 219th thEvAra vaippu temple.There is another thiripurasundhari samEtha agneeswarar temple, shivAlayam is near by.NvPT Guru - navagraga parikAra temple means curing temple for those who has guru dhOsham in jAthakA,since lord sree murga blessing here as gnana guru.And since there are two dhakshnamurthi s and two sandikeswarar s are here in this temple.And sreethiripurasundhari sametha sree agneepureeswarar temple is also near.
shaivam.org/hindu-hub/temples/place/433/pirambil-agnees...
Location:8kms from manganalloor-thiruvilaiyaattam road.
மங்கை நல்லூர்- திருவிளையாட்டம் சாலையில் எட்டு கிமி தூரத்தில் உள்ளது பெரம்பூர்.
பிரம்பு காடாக இருந்தமையால் பிரம்பில் என்றும் பிரம்மன் உபதேசம் கேட்டதால் பிரம்மா மங்களபுரம் எனவும் அழைக்கப்பட்டது.தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்த சூரபத்மனை முருகப்பெருமான் அழித்தார். மயிலாகவும், சேவலாகவும் மாறிய சூரபத்மன் முருகனின் ஞான உபதேசம் பெற விரும்பினான்.பிரம்மனுக்கும், மயிலுக்கும் முருகன் ஞான உபதேசம் செய்ததால், இத்தல முருகன் ஞான குருவாக விளங்குகிறார். பெரும்பாலான முருகன் கோயில்களில் மயிலின் தலை வலது பக்கம் திரும்பியிருக்கும். ஆனால் இங்கு முருகனின் இடது பக்கம் திரும்பியிருப்பது சிறப்பம்சமாகும்.
மூலஸ்தானத்தில் முருகப்பெருமான் ஆறுமுகம், 12 திருக்கரங்களுடன், மயில்மீது அமர்ந்தபடி, வள்ளி தெய்வானையுடன் அருள்பாலிக்கிறார்.இங்கு முருகப்பெருமான் ஞான குருவாக விளங்குகிறார். எனவே குக தட்சிணாமூர்த்தி,குக சண்டிகேஸ்வரர் அருளுகின்றனர். அப்பர் தேவாரத்தில் இத்தலம் தேவார வைப்புத்தலமாக போற்றப்படுகிறது.
கிழக்கு நோக்கிய நிலையில் ஐந்து நிலைகளுடன் கூடிய பிரமாண்ட கோபுரம். இரண்டு பிரகாரங்கள், அர்த்தமண்டபம், மகாமண்டபம் என கோயில் பெரியதாக அமைந்துள்ளது. கோயில் வாசலில் விநாயகருக்கும் இடும்பனுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன.
கோயில் பிரகாரத்தில் ஆதி விநாயகர் தனி ஆலயத்தில் கிழக்கு நோக்கி உள்ளனர்.
கோட்டத்தில் தென் புறம் குக தட்சணாமூர்த்தி, துர்க்கை, உள்ளனர்.வடமேற்கில் பிரம்மபுரீஸ்வரர், ஆனந்தவல்லி, தனி கோயில் கொண்டுள்ளனர். அவரது கோட்டத்தில் விநாயகர், தென்முகன், லிங்கோத்பவர், பிரம்மன், சண்டிகேஸ்வரர்,உள்ளனர் அருகில் மகாலட்சுமி தனி சிற்றாலயத்தில் உள்ளார். வடகிழக்கில் கங்கை அம்மன், ஆதி தேவசேனா ஆகியோர் உள்ளனர்.மிளகு செட்டியார் என்பவர் இத்தலத்தில் தங்கி இக்கோயிலுக்கு திருப்பணி செய்துள்ளார். எனவே அவரது சிலை நந்திக்கு அருகில் வைக்கப்பட்டுள்ளது. திருவாதிரை நாளில் இவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.பொதுவாக சிவன் கோயில்களில் சிவன் சன்னதிக்கு பின் புறம் வடமேற்கு திசையில் முருகனுக்குத் தனி சன்னதி இருக்கும். ஆனால் இத்தலத்தில் முருகன் குருவாக விளங்குவதால், முருகனின் மூலஸ்தானத்திற்கு பின்புறம் வடமேற்கு திசையில் தனி சன்னதியில் பிரம்ம்புரீஸ்வரரும் ஆனந்தவல்லி அம்மனும் வீற்றிருந்து அருளுகின்றனர்.இதனால் இத்தலத்தில் தந்தை ஸ்தானத்தில் மகனும், மகன் ஸ்தானத்தில் தந்தையும் அருளுவதாக கூறப்படுகிறது. மூலவர் முருகன் அருகில் தெற்கு நோக்கி தெய்வானை இங்கு தனி சன்னதியில் அருளுகிறாள்.முருகனது அனைத்து உற்சவங்களும் இங்கு மிக சிறப்பாக நடக்கும்.
shaivam.org/siddhanta/sp/spt_v_pirampil.htm
Nearby cities:
Coordinates:   11°2'1"N   79°41'48"E
This article was last modified 4 years ago