Mannargudi Annamalainathar temple (Mannargudi)

India / Tamil Nadu / Mannargudi / Tanjore road
 temple, Shiva temple
 Upload a photo

மன்னார்குடி என பொதுவில் அழைப்பது இரு மன்னார்குடியை நினைவு படுத்தும், திருவாரூர் மாவட்டத்து ராஜமன்னார்குடி, கடலூர் மாவட்டத்து காட்டுமன்னார்குடி

சோழர்காலத்தில்இப்பெயர்களில் காணப்பெறும் இரண்டு ஊர்களும் விஜயநகர அரசர்கள் காலத்திற்கு முன்பு மன்னார்கோயில் என்றே அழைக்கப்பெற்றன. கோயில் என்ற சொல்லைத் தெலுங்கு மொழியில் ‘குடி’ எனக் குறிப்பிடுவர்.

ராஜமன்னார்குடியின் பழம்பெயர் ராஜாதிராஜ சதுர்வேதிமங்கலம் என்பதாகும்.


மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் உள்ள தெற்கு குலோத்துங்கனின் கல்வெட்டில் ‘‘சுத்தவல்லி வளநாட்டுப் பிரதேயம் தனியூர் ஸ்ரீராஜாதி ராஜ சதுர்வேதிமங்கலம்’’ என்று குறிப்பிடுகின்றது.

இங்கு குறிக்கப்பெறும் ஸ்ரீராஜாதிராஜன் என்ற பெயர் ராஜராஜ சோழனின் பேரனும், கங்கையும் கடாரமும் கொண்ட ராஜேந்திர சோழனின் தலைமகனுமான முதலாம் ராஜாதிராஜ சோழனைக் குறிப்பதாகும்.

இக்கோயில் ராஜகோபாலசாமி கோயிலின் நேர் மேற்கில் உள்ளது தஞ்சை சாலையில் உள்ள EB நகர், வசந்தம் நகரின் வடக்கில் உள்ளது. இப்பகுதியில் தான் சோழ மாளிகை இருந்துள்ளது, தற்போது மாளிகை மேடு எனப்படும் பகுதியில் தான் இக்கோயில் உள்ளது. மேலும் இவ்வூரில் 75குளங்கள் உள்ளன என்பது இவ்வூரின் சிறப்பு.

இந்த ஊரில் ஏழு சிவாலயங்கள்உள்ளன, முன்பு இந்த ஊரில் பதினோரு சிவாலயங்கள் இருந்தனவாம். சோழர்கள் காலத்தில் கட்டப்பெற்ற மூன்று சிவாலயகளில் இந்த அண்ணாமலையார் கோயிலும் ஒன்று ராஜாதி ராஜனால் கட்டப்பெற்ற கோயில் இதுவாகும்.

ராஜாதிராஜ விண்ணகரம், ஸ்ரீகைலாசமான ராஜாதி ராஜீஸ்வரம், ஜெயங்கொண்ட சோழீஸ்வரமுடையார் கோயில் எனக் கல்வெட்டுகளில் குறிக்கப் பெற்றுள்ளன. இம்மூன்று கோயில்களும் ராஜாதிராஜ சோழனால் எடுக்கப்பெற்ற திருக்கோயில்கள்

பின்னாளில் ராஜகோபாலசுவாமி கோயிலை குலோத்துங்க சோழன் புதுப்பித்து விரிவுபடுத்தினான். அதனால் குலோத்துங்க சோழ விண்ணகரம் என்ற பெயரும் ஏற்பட்டது.

இவ்வூரில் சிவாலயமாகத் திகழும் அண்ணாமலையார் கோயில்
சோழர்களின் மூன்றாவது சிவாலயமெனினும் அக்கோயிலின் பெயராக ‘‘ராஜேந்திர சோழ திரு அண்ணாமலையுடையார் திருக்கோயில்’ என்று அங்குள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன

கம்பீரமான சோழ கட்டுமானம் கருவறை அதனின்று நீளும் நீண்ட அர்த்த, மகா மண்டபங்கள்

முகப்பில் மூன்று நிலை முதன்மை கோபுரம், அடுத்து மகாமண்டபத்தின் வெளியில் நந்திமண்டபம் மற்றும் அழகிய பலிபீட கட்டுமானம். பிரகார இடதுபுறம் விநாயகர் திருக்கோயில்,

முருகன் திருக்கோயில், வடமேற்கு மூலையில் ஜெஷ்ட்டா தேவிக்கு சிறிய மாடம் கட்டப்பெற்று வைக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கில் நவகிரகம் பிற்சேர்க்கை, ராஜா சிலை ? , நாகர்பைரவர் , சனி உள்ளனர்,


தற்போது கோயில் புதுப்பிக்கப்பட்டு பொலிவுடன் உள்ளது அருகாமை மக்கள் விசேட நாட்களில் குழுமுகின்றனர்.

இறைவன்- அண்ணாமலை நாதர்
இறைவி- அபீதகுஜாம்பாள்
Nearby cities:
Coordinates:   10°39'59"N   79°25'50"E

Comments

  • This is one of the holy temple of lord shiva in mannargudi among the eight. The full moon day the worshipers perform GIRI VALAM - (16 round ). The pradhosam pooja's are regularly conducted in pradhosa kaalam. Powerful god with simple temple.
This article was last modified 7 years ago