Alathur sivan temple (Alathur)

India / Tamil Nadu / Madukkur / Alathur / Musiri road
 Shiva temple  Add category

மன்னார்குடி- பட்டுக்கோட்டை சாலையில், பட்டுக்கோட்டைக்கு எட்டு கிமி முன்னதாக உள்ளது ஆலத்தூர். சோழர்காலத்தில் முசுகுந்த வளநாடு என அழைக்கப்பட்ட பகுதியாகும்.

இப்பகுதியில் பெரியதாய் உள்ள ஊர் இதுவாகும். பல கோயில்கள் உள்ளன. அவற்றில் அய்யனார் கோயில் இப்பகுதியில் சிறப்பாக அறியப்படுகிறது. சிவன்கோயில் ஊரின் கிழக்கு பகுதியில் உள்ளது.. எதிரில் பெரிய குளம் ஒன்றும் உள்ளது.

கோயில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரத்துடன் உள்ளது. எதிரில் பெரிய அரசும் வேம்பும் இணைந்த மரமொன்றுள்ளது.


இறைவன் கிழக்கு நோக்கியும், இறைவி தெற்கு நோக்கியும் உள்ளனர். பிரகாரத்தில் விநாயகர், முருகன் சிற்றாலயங்கள் உள்ளன.

இறைவன் - விஸ்வநாதர்
இறைவி- விசாலாட்சி
Nearby cities:
Coordinates:   10°29'33"N   79°21'12"E
This article was last modified 3 years ago