ஸ்ரீசௌந்தரேஸ்வரர் திருக்கோயில், பனையூர் (திருப்பனையூர்)

India / Tamil Nadu / Nannilam / திருப்பனையூர் / Andippandal-Thirukkannapuram Rd
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

SCN073 - ஸ்ரீபெரியநாயகி உடனுறை ஸ்ரீஅழகியநாதர் அல்லது ஸ்ரீப்ரஹந்நாயகி சமேத ஸ்ரீதாலவனேஸ்வரர் ஆலயம் திருப்பனையூர் சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 73வது தலம்.கோயில் வாயில் நுழைந்ததும் - துணை இருந்த விநாயகர் - கரிகாற் சோழனுக்குத் துணையிருந்ததனால் - இவ்விநாயகர் 'துணை இருந்த விநாயகர் ' என்னும் பெயர் பெற்றார்.பராசர முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கத் திருமேனி - தாலவனேஸ்வரர் - மேற்கு நோக்கியது - சதுர ஆவுடையார் - இப்பெருமானே தலத்திற்குரிய இறைவராவார்.சுந்தரர் வரலாற்றுத் தொடர்புடைய திருவாரூரில் உள்ள மாற்றுரைத்த பிள்ளையார் நினைவாக, இங்கு பிரகாரத்தில் உள்ள விநாயகரும் 'மாற்றுரைத்த விநாயகர் ' என்றழைக்கப்படுகிறார்.சுந்தரர், திருவாரூர்ப் பங்குனி உத்தரத் திருநாளுக்காகப் பரவையாரின் வேண்டுகோளின்படி, திருப்புகலூர் இறைவனிடம் பொன் பெற்று "தம்மையே புகழ்ந்து... " என்று பாடித் திருப்புகலூர் வணங்கிய பின்பு, திருப்பனையூர் நினைத்து வரலானார். அப்போது ஊரின் புறத்தே இறைவன் நடனக் காட்சி காட்டியருள, எதிர் சென்று தொழுது, வீழ்ந்து வணங்கி, 'அரங்காடவல்லார் அழகியர் ' என்று பதிகம் பாடி, அருள் பெற்றார். இந்நிகழ்ச்சியின் நினைவாக இன்றும், ஊருக்கு வடகிழக்கில் உள்ள மாணிக்க நாச்சியார் திட்டிற்கு அருகே உள்ள குளம் 'சந்தித்த தீர்த்தம் ' என்னும் பெயருடன் திகழ்கிறது.பனைமரங்களை மிகுதியாக கொண்ட மணற்பாங்கான ஊர்; இதற்கு "தாலவனம் " (தாலம் - பனை) என்றும் பெயருண்டு.தல மரங்களாக இரு பனைமரங்கள் உள்ளன. இம்மரங்கள் நெடுங்காலமாக இருந்து வருகின்றன. வளர்ந்த இம்மரங்கள் முதிர்ச்சியுறுங் காலத்தில், "வித்திட்டு முளைக்காததாக" (வாழையைப்போல) இரண்டின் அடியிலும் முறையே பனங்கன்றுகள் தாமாகவே தோன்றி வளர்ந்து வருகின்றன.சப்த ரிஷிகள் வழிபட்ட ஏழு சிவலிங்கங்கள் வரிசையாக உள்ளன.
shaivam.org/siddhanta/sp/spt_p_panaiyur.htm
temple.dinamalar.com/New.php?id=1080
அமைவிடம்:பேரளம் - திருவாரூர் சாலையில், சன்னாநல்லூரைக் கடந்து சென்று 'பனையூர் ' என்று கைகாட்டியுள்ள கிளைப்பாதையில் 1 கி. மீ. செல்ல வேண்டும். குறுகலான மண்பாதை, பேருந்து செல்லாது. கார், வேன் செல்லும்.மயிலாடுதுறை-திருவாரூர்ச் சாலையில் ஆண்டிப்பந்தல் எனும் நாற்சந்தியில் கிழக்கு நோக்கி 'பனையூர்' என்று கைகாட்டி உள்ளது. அந்த பாதையில் 2கிமி செல்ல வேண்டும்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°51'52"N   79°39'27"E

கருத்துரைகள்

  •  177 கி.மீ
  •  178 கி.மீ
  •  246 கி.மீ
  •  300 கி.மீ
  •  400 கி.மீ
  •  433 கி.மீ
  •  447 கி.மீ
  •  456 கி.மீ
  •  472 கி.மீ
  •  545 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 7 years ago