sree mArkka sahAyEswarar temple, moovalur (Moovalur)

India / Tamil Nadu / Mayiladuthurai / Moovalur / Kumbakonam-Mayiladuthurai Road
 temple, Shiva temple

TVT273 - sree mangalanAyaki samEtha sree mArgasagAyEsar temple moovaloor is 273rd thEvAra vaippu temple. This is one of the pancha dhakshnAmoorthi temples.BStarT - birth star temple, the temple to worship who born in uthiram star.AvrT - avathara temple, first atheenam of thiruvaavaduthurai sre namashivaya murthi's birth place.MuMT - MuMoorthi Temple, since lord shiva worshiped himself with lord vishnu and lord brahma.

shaivam.org/hindu-hub/temples/place/457/moolavar-maarga...
Location:2kms on the road to kumbakonam from mayilaaduthurai.

மயிலாடுதுறை- கும்பகோணம் சாலையில் ஐந்து கிமி தூரத்தில் உள்ளது மூவலூர். வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சகன்எனும் மூன்று அசுரர்களும் மூன்று பறக்கும் கோட்டையாக மாறி தேவர்களை அழிக்க இறைவன் அந்த முப்புரங்களையும் இத்தலத்தில் தான் எரித்ததாக கூறுவார்,

அதனால் தேவர்கள் தங்களால் தான் முப்புரங்களும் அழிக்கப்பட்டன என செருக்குடன் அலைய இறைவன் பிரம்மா, திருமால் இருவரை தவிர அனைவரையும் சிவன் அக்னியால் எரிக்க இருவரைத்தவிர மற்றெல்லாம் சாம்பலாகிட இருவரும் வருத்தமடைந்து இறைவனை வேண்ட இறைவனும், ருத்ர வடிவில் வந்து லிங்க வடிவில் இருக்கும் தன்னை எவ்வாறு வழிபடுவது என லிங்கத்தினை பிரதிஷ்ட்டை செய்து எவ்வாறு லிங்க வழிபாடு செய்ய வேண்டும் என கற்று கொடுத்ததால் இவர் மார்க்கசகாயர் (வழி காட்டும் வள்ளல்) என அழைக்கப்பட்டார்.

கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் அதனை அடுத்து உயர்ந்த கொடிமரமும், நான்கு திக்கை நோக்கும் நான்கு வேத நந்தியும் மையத்தில் பலிபீடமும் உள்ளது. அதற்கு அடுத்து இறைவனை நோக்கி அதிகார நந்தி உள்ளது. கோயிலின் முகப்பு பெரிய அரண்மனையை நினைவூட்டும் விதமாய் உயர்ந்த வாயில் கொண்ட மண்டபமும், எட்டு பட்டை கொண்ட கூம்பு வடிவ விதானமும் அழடையது. அடுத்து பல தூண்கள் கொண்ட மகாமண்டபம் அதில் சப்த மாதர், சப்த நாகர் மகா கணபதி ஆகியோரும் மங்களநாயகி எனும் அம்பிகையும் உள்ளனர். முகப்பு மண்டபத்தில் தெற்கு நோக்கிய அம்பிகை திருக்கோயில் உள்ளது.
முதல் பிரகாரத்தில் கோட்டத்தில் நந்தி மீது ஆரோகணித்து மேதா தட்சிணாமூர்த்தியாக அருள்புரியும் தலம் தட்சிணாமூர்த்தியின் திருவடிக்கீழ் யானை முகம், மான், சிம்மம், ரிஷபம் முதலியவையும் முயலகன், சனகாதியர் நால்வர் ஆகியோருடன் சேர்ந்திருப்பது புதுமையாகவுள்ளது. மேற்கில் லிங்கோத்பவர், வடக்கில் பிரம்மன், துர்க்கை, பிப்பலர், சந்திரசேனர், வீரசேனர், காரியசேனர் கார்கோடகன் ஆகியோர் உள்ளனர்.
மேற்கு திருமாளிகை பத்தியில் இரண்டு விநாயகர்கள் உள்ளனர், அடுத்து அண்ணாமலையார், உண்ணாமுலையாள், கழுமரம், விசுவநாதர், விசாலாட்சி, சொக்கர், அர்த்தநாரி, பிரமலிங்கம், விழணு லிங்கம், கஜலெட்சுமி, சடையப்பர், தட்சனாமூர்த்தி ஆகியோரும், முருகன் சன்னதி மகாலட்சுமி சன்னதி, ஆகியவையும் உள்ளன.
பொன்னி நதியில் நீராடி மூவரால் பூஜிக்கப்பட்டதால் மூவலூர். மகிஷனை வதம் செய்த துர்க்கை அகோர உருவம் பெற்றதால் இங்கே துர்கை வழிபட்டு அழகிய உருவம் பெற்றார்.. சந்திரன் வழிபட்டு இஷ்ட சித்தி அடைந்த தலம்.
பிப்பிலமுனியின் சரும நோய் நீங்கிய தலம். உபமன்யு நீராடி வழிபட்டது. சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்த கர்ம சேனனுக்கு கண் பார்வையும் போனது. இறைவன் மேல் பக்தி தோன்றியது. உணவிற்கு வழியின்றி பசியால் வாடியபோது அந்தணர் தோன்றி கட்டமுது உண்ணச் சொல்ல மூவலூர் சென்று தரிசித்தபின்பே உணவு உண்பேன் என்றவரை முதலில் அமுது உண்க. பிறகு தாமே அங்கு அழைத்துச் செல்வதாக உறுதி. கூறி அழைத்து செல்லும் வழியில் சந்திரசேனர், வீரசேனர், காரியசேனர் ஆகியோர் மூவலூர் செல்ல விருப்பம் தெரிவிக்க அனைவருக்கும் வழிகாட்டியாக மூவலூர் அழைத்து வந்தார் அந்தணர். கோவில் வந்ததும் மறைந்தார் அந்தணர். கர்மசேனருக்கு கண் பார்வை நன்றாக தெரிந்தது. அந்தணர் மீண்டும் காட்சி தர நின்னைக் கண்ட கண்கள் பிறவற்றைக் காணா எனக்கூற நால்வருக்கும் முக்தி அருளி லிங்கத்தினுள் மறைந்தார்.
ராஜ கோபுர வாயிலில் விநாயகர் சிற்றாலயமும், முருகன் சிற்றாலயமும் உள்ளது. திருவாடுதுறை ஆதின முதல்வர் குருநமசிவாயர் அவதரித்த தலம்.

இக்கோயிலில் பதினைந்திற்கும் மேற்ப்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன. விக்கிரம சோழன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் ராஜேந்திரன், பாண்டியன் ஸ்ரீவல்லபன், வீரவிழுப்பதர உடையார், அச்சுதராயர், ஆகியோர் திருப்பணி செய்துள்ளனர். இவ்வூரை ஜெயங்கொண்ட சோழ வளநாட்டு திருவழுந்தூர் நாட்டு திருமூவலூர் என்று கல்வெட்டுக் குறிக்கின்றது. சேவப்ப நாயக்கர் பதின்மூன்று வேலி நிலம் அளித்து கோயில் பராமரிப்பிற்காகவும், மடம் அமைத்து உணவளிக்கவும் ஏற்ப்பாடுகள் செய்துள்ளார். பட்டசேதிராயன் என்பார் கோயிலை பழுது பார்க்க நிலம் அளித்த தகவலும் உள்ளது.
பிரதான சாலை ஓரத்திலேயே பல சிறப்புக்கள் கொண்ட இக்கோயில் உள்ளதால் அனைவரும் வந்து இறைவனை வணங்கி செல்லுங்கள் என கேட்டுக்கொள்கிறேன்.
Nearby cities:
Coordinates:   11°5'18"N   79°36'34"E

Comments

This article was last modified 4 years ago