Koorainadu Punukeeswarar Temple (Mayiladuthurai)

India / Tamil Nadu / Mayiladuthurai / Punukeeswarar koil street, 1
 temple, Shiva temple

சோழ நாடு பல வள நாடுகளாக பிரிக்கப்பட்டிருந்தது, அவற்றில் கூறைநாடு என இப்பகுதிக்கு பெயர் . (கும்பகோணம் அருகில் உள்ளது கொரநாட்டு கருப்பூர் எனப்படும் கூரைநாட்டு கருப்பூர்) கூரை புடைவைகள் நெய்யும் செங்குந்தர்கள் வசிக்கும் பகுதிக்கு அந்த புடவையின் பெயராலேயே கூரை நாடு என அழைக்கப்படுகிறது என்கிறார்கள்.

இந்திரன் புனுகுப்பூனை உருக்கொண்டு பூஜித்த இறைவன் என்பதால் ஈசன் `புனுகீஸ்வரர்' என்ற பெயரைப் பெற்றார்.

ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ளது. ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது முன்மண்டபத்தில் கொடி மரம் உள்ளது. கொடி மரத்தை அடுத்து, பலிபீடமும், நந்தியும் உள்ளன. கோயில் வளாகத்தின் இடப்புறம் முதலில் அம்மன் சன்னதி உள்ளது. அம்பிகை கருவறையைச் சுற்றி வரும்போது சண்டிகேஸ்வரி சன்னதியைக் காணலாம். அம்மன் சன்னதியின் முன்பாக பலிபீடமும், நந்தியும் உள்ளன. அம்மன் சன்னதி அருகே அலங்கார மண்டபமும், பள்ளியறையும் உள்ளன.

கருவறைக்கு வெளியில் உள்ள முதல் பிரகாரத்தில் சுற்றி வரும்போது இடப்புறம் முருகன் வள்ளி தெய்வானை சகிதமாய் உள்ளார், முருகன் சன்னதி உட்புறமாகவே மகாலட்சுமி சன்னதியும் உள்ளது.
பின் புறம் கருவறை கோட்டங்களில் பிரம்மன், துர்க்கை, லிங்கோத்பவர் தென்முககடவுள், ஜுரகறேஸ்வரர் உள்ளனர் லிங்கோத்பவர் அருகில் சுவற்றில் சமீப கால கல்வெட்டு ஒன்றுள்ளது தென்முக கடவுளின் மேல் வரந்தையில் ஒரு கல்வெட்டும் ஓவியமும் உள்ளது. அடுத்து இத்தலத்தில் திருஅவதாரம் செய்ததாகக் கருதப்படுபவரும்
அறுபத்துமூன்று நாயனார்களில் ஒருவருமாகிய
நேசநாயனாரின் சந்நிதி உள்ளது. சிவனடியார்களுக்கு ஆடைகள் ஈந்த தொண்டினை இவர் செய்ததாகப் பெரியபுராணம் கூறுகிறது.



இறைவன்- புனுகீஸ்வரர்
இறைவி- சாந்த நாயகி
Nearby cities:
Coordinates:   11°5'43"N   79°38'37"E

Comments

  • Hi to all ,i and my family is living in puvukeeswarar east street
This article was last modified 8 years ago