Thulakattam Kasi Vishwanathar Temple (Mayiladuthurai)

India / Tamil Nadu / Mayiladuthurai / Mahathana street, 1
 Shiva temple  Add category

மயிலாடுதுறை மகாதானத் தெருவின் வடக்கில் காவிரி ஆற்றின் கரையில் உள்ளது இக்கோயில். திருத்தருமபுரம் மடத்தின் பொறுப்பில் உள்ள கோயில் இதுவாகும்.

கிழக்கு நோக்கியது, சற்று சிறிய சந்துபோல உள்ளது வாயில் இருப்பினும் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ளது கோயில் வளாகம். ஆதீன கர்த்தர் காசி சென்று திரும்பியதன் நினைவில் கட்டப்பட்ட கோயில் இதுவாகும். இதன் விமானமே இதன் சிறப்பம்சம் ஆகும். ஒரு ஸ்தூபி போன்று வடநாட்டு பாணியில் அமைக்கப்பட்டுள்ளது இறைவன், இறைவி இருவரது விமானமும். வளாகம், பிரகாரம், மண்டபம் கருவறை என படிப்படியாக உயர்ந்து நிற்கிறது

அதிட்டானம். கருவறை கோட்டங்களில் விநாயகர்,தென்முககடவுள், லிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை என உள்ளனர். மேற்கு திருமாளபத்தியில் வரசித்தி விநாயகர், முருகன், ஞானேஸ்வரர், ஞானேஸ்வரி என சிறிய மூர்த்திகள் உள்ளன. ஞானேஸ்வரி அருகில் திருமால் பாதம் உள்ளது. அடுத்த சன்னதியில் மகாலட்சுமி. பைரவர், நவகிரகங்கள் வடகிழக்கில் உள்ளார்கள்.

குடமுழுக்கு கண்டு அறுபது ஆண்டுகள் கடந்துவிட்டன என சென்ற குடமுழுக்கின் கல்வெட்டு நினைவூட்டிக்கொண்டே உள்ளது.
Nearby cities:
Coordinates:   11°6'13"N   79°39'10"E
This article was last modified 1 year ago