ஸ்ரீவாஞ்சியநாதர் திருக்கோவில், திருவாஞ்சியம், ஸ்ரீ வாஞ்சியம், (Shrivangiyam Thiruvangiyam)

India / Tamil Nadu / Nannilam / Shrivangiyam Thiruvangiyam
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

SCN070 - ஸ்ரீமங்களநாயகி உடனுறை ஸ்ரீவாஞ்சியநாதர் திருக்கோவில், திருவாஞ்சியம் சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 70வது தலம். TrVT - தீர்த்த விஷேசம் கொண்ட தலம், இங்குள்ள குப்தகங்கை சிறப்பு போற்றத்தக்கது.பதவி இழந்தவர்கள், பணிமாற்றம் விரும்புவர்கள், ஒன்று சேர விரும்பும் பிரிந்த தம்பதியினர் கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் குப்த கங்கையில் நீராடி குறை நீங்கப்பெறலாம்.TPuT - திருப்புகழ் திருத்தலம். PT Ayush dhosham- ஆயுள் தோஷம் நீக்கும் திருத்தலம், இங்கு வணங்கும் பக்தர்களுக்கு யமவாதை இல்லை.EKT - காசிக்குச் சமமான கோவில்களுள் ஒன்று.ஸ்ரீ அப்பர் பெருமான் இத்தலம் தங்கி இறைவனை தரிசிப்போர் 'அமரர்க்கு அமரர்' என்று பதிகம் பாடிஇருகிறார்.அடியார்கள் ஒரிரவேனும் தங்கி,குப்தகங்கையில் நீராடிஅம்மை,அப்பனை வணங்க நல்வாழ்வு உறுதி. இங்குள்ள விநாயகர் அபயங்கர விநாயகர்! இறைவன் திருக்கயிலையிலிருந்து இத்தலத்திற்கு வந்ததால், அம்பிகை "வாழ வந்த நாயகி"யாக இத்தலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள்.பூமகள், திருமகள் இருவர்க்கும் ஏற்பட்ட பிணக்கால் திருமகள் திருமாலை விட்டுப் பிரிந்தாள் என்றும், திருமால் இவ்விறைவனை வழிபட்டு, திருமகளை வாஞ்சித்துப் பெற்றதால் திருவாஞ்சியம் எனப் பெயர் பெற்றது.ஸ்ரீவாஞ்சியம் பெருமாள் ஸ்ரீ மகாலக்ஷ்மியுடன் இக்கோவிலுக்கு பின்புறம் தனிக்கோவிலில் சேவை சாதிக்கிறார்.
மகம், பூரம், சதயம், பரணி நட்சத்திரத்தினர், மேஷம், சிம்மம், கும்ப ராசி அல்லது லக்னம் கொண்டவர்கள் தங்கள் தோஷங்கள் நீங்க வழிபாடு செய்யலாம்.கிரகண காலத்தில் எல்லா கோயில்களின் நடைகளும் அடைக்கப்படுவது வாடிக்கை. ஆனால், இக்கோயில் மட்டும் திறக்கப்பட்டு, கிரகண நேரத்தில் சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்படும்.
shaivam.org/siddhanta/sp/spt_p_vanyciyam.htm
temple.dinamalar.com/New.php?id=597
அமைவிடம்: இக்கோவில் மயிலாடுதுறை-பேரளம் இரயில் பாதையில் நன்னிலம் இரயில் நிலையத்திற்கு மேற்கே 9கீ.மீ.தூரத்தில் உள்ளது. நன்னிலத்திலிருந்து பஸ் வசதி உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°52'18"N   79°34'21"E
  •  176 கி.மீ
  •  182 கி.மீ
  •  251 கி.மீ
  •  306 கி.மீ
  •  401 கி.மீ
  •  434 கி.மீ
  •  450 கி.மீ
  •  457 கி.மீ
  •  474 கி.மீ
  •  548 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 7 years ago