Sri Putridam kondeeswarar Shiva temple puthur ammapettai

India / Tamil Nadu / Ammapettai / -Do Not Use-
 temple, Shiva temple
 Upload a photo

தஞ்சை அம்மாபேட்டையின் தொடர் வண்டி பாதையின் சற்று முன்னர் puthur புத்தூர்செல்லும் பாதையில் அரைகிமி தூரம் சென்றால் மேற்கு நோக்கிய சிவாலயத்தினை அடையலாம்.

முகப்பில் மூன்று நிலை கோபுரம் உள்ளது, அதனை அடுத்து பெரிய மண்டபம் உள்ளது அதில் கொடிமரம் உள்ளது. வலது புறம் கிழக்கு நோக்கிய விநாயகர் சன்னதியும் இடது புறம் முருகர் சன்னதியும் உள்ளன.

கருவறை துவிதள விமானமாக உள்ளது.அதில் தென்முகன் லிங்கோத்பவர், துர்க்கை பிரமன் உள்ளனர். பிரகாரத்தில் மேற்கு நோக்கிய மண்டபம் உள்ளது அதில் ஒன்பது கோள்கள் , பைரவர், சரஸ்வதி ஆகியோர் உள்ளனர். சூரியனுக்கு தேர் போன்ற ஒரு கருவறை உள்ளது

இறைவன்- புற்றிடம்கொண்டீஸ்வரர் இறைவி- சௌந்தரநாயகி

கங்கை கொண்ட ராஜேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில், 8ம் நூற்றாண்டில் வெளியிட்ட செப்பேட்டுத்தொகுதி, நூறாண்டுகளுக்கு முன் புத்தூர் என்ற ஊரில் பூமியில் புதைந்திருந்து வெளிப்பட்டது. சேவு பாண்டியர் என்பவரால் எடுக்கப் பெற்ற அத்தொகுதி, கரந்தை செப்பேடுகள் என்ற பெயரில், சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது. பெரிய அளவில், 57 செப்பேடுகளில் சாசனம் எழுதப் பெற்று ராஜேந்திரன் முத்திரையுடன், அது காணப்படுகிறது. ராஜேந்திரசோழன், தன் தாய் திருபுவனமாதேவி பெயரில், மிகப் பிரமாண்டமான ஏரியை அமைத்ததோடு, அதனருகில் இருந்த, 51 ஊர்களிலிருந்து அரசுக்கு வருவாயாகக் கிடைக்கும், 51 ஆயிரத்து ஐம்பது கலம் நெல்லை, பல்வேறு சாத்திரங்களில் உள்ள அறிஞர்களின் உணவுக்காக அளித்தான் என்பதை, அந்த செப்பேட்டு சாசனம் விவரிக்கிறது. அதில், பெரிய ஏரி பற்றிய பல செய்திகளும், சுற்றுப்புற ஊர்களின் நிலஅளவை, பல்வேறு சமயம் சார்ந்த கோவில்கள் பற்றிய விவரங்களும் குறிக்கப் பெற்றுள்ளன
Nearby cities:
Coordinates:   10°47'14"N   79°19'38"E

Comments

  • This Putridangondeeswarar temple is known for its prosperity and holiness. The festival at the month of march namely the "Panguni Uthiram" is celebrated famously by the in and around villagers of Puthur.
This article was last modified 7 years ago