இலுப்பூர் சிவன் கோயில்-Eluppur sivan temple (Eluppur)

India / Tamil Nadu / Tharangambadi / Eluppur / HariharanKoodal, Main RD
 கோவில், சிவன் கோயில்

Iமயிலாடுதுறை- தரங்கம்பாடி சாலையில் 22கிமி தூரத்தில் உள்ளது இலுப்பூர். இலுப்பை மரங்கள் கூடிய காடு இங்கிருந்ததால் இலுப்பூர் என பெயர் பெற்றுள்ளது.

வீரசோழன் ஆற்றின் வடகரையில் சங்கரன்பந்தலும், தென் கரையில் இலுப்பூரும் உள்ளன. பெரிய குளக்கரையின் மேற்கு கரையில் உள்ளது சிவன்கோயில்
அரை ஏக்கர் பரப்பில் பெரிதான வளாகத்தில் உள்ளது கோயில் கிழக்கு நோக்கிய கருவறை, அம்பிகை தென் திசை நோக்கி, பெரிய மண்டபம் இரு கருவரிகளையும் இணைக்கிறது.

இறைவனின் கருவறை வாயிலில் விநாயகர், முருகன் உள்ளனர். பிரகாரத்தில் விநாயகர், முருகன் சன்னதிகளும், மண்டபத்தின் ஓரம் பைரவர் சனி உள்ளனர்.

முன்னர் பெரிய கோயிலாக மேற்கு வடகிழக்கு மண்டபங்களுடன் இருந்து பின்னர் சிதிலமடைந்து தற்போது சிறிய கோயிலாக கட்டப்பட்டுள்ளது.

அங்கிருந்த லிங்கம், பைரவர் சிலைகள் வெயிலில் கிடக்கின்றன.

இதனை கண்ணுறும் அன்பர்கள் எவரேனும் இக்கோயில் வளாகத்தில் கிடக்கும் இறைவனுக்கு ஒரு தகர கொட்டகையினை புத்தாண்டு பரிசாக அளிக்க வேண்டுகிறேன்.

இறைவன்- மத்தியார்ஜுனேஸ்வரர்

அர்ஜுனம் என்றால் மருதம் மரத்தினை குறிப்பது,அதனால் இத்தலம் திருவிடைமருதூர் போன்று பெருமைக்குரிய ஒரு தலமாக இருந்திருக்க வேண்டும். தல மரமும் மருத மரமாக இருந்திருத்தல் வேண்டும்.

இறைவி- மரகதவள்ளி
. இவ்வாலயம் அருகே பீமேஸ்வரர் திருக்கோவிலும் உண்டு.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°0'57"N   79°45'48"E

கருத்துரைகள்

  •  189 கி.மீ
  •  198 கி.மீ
  •  259 கி.மீ
  •  308 கி.மீ
  •  416 கி.மீ
  •  449 கி.மீ
  •  460 கி.மீ
  •  472 கி.மீ
  •  489 கி.மீ
  •  558 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 7 years ago