KAILASANATHAR KOVIL ( LORD SIVA'S TEMPLE ) (Karaikal)

India / Pondicherry / Karaikal
 temple, Shiva temple
 Upload a photo

The famous Kailasanathor (Shiva) temple, every year mangani festival is celebrated here. The Karaikal Ammaiyar temple is situated opposite to this temple.

கைலாசநாதர் திருக்கோயில்! சிவபெருமான் சிவனடியாராக வந்து அம்மையாரிடத்து மாங்கனித் திருவிளையாடல் நடத்திக் காட்டியவர்! எதிரிலேயே மாங்கனித் திருவிழா நடக்கக் காரணமான நம் தந்தைக்கும் (சிவபெருமான்) தாயான காரைக்கால் அம்மை என அறியப்பட்ட புனிதவதியார் பிறப்பெடுத்த, வாழ்ந்த திருத்தலம்! அழகிய திருக்குளம்!

உன்னதமான இத் திருத்தலத்திற்கு வந்தால் பக்தி பெருகும் என்பது நிச்சயம்! காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர்,ஸ்ரீ சனீஸ்வர பகவான் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அந்தக் கோயில் மட்டும் அல்லாது, எதிரே காரைக்கால் அம்மையார் திருக்கோயில், நிரவி ஸ்ரீ கரியமாணிக்கப் பெருமாள் திருக்கோயில், திருத்தருமபுரம் ஸ்ரீ யாழ்மூரி நாதர் கொவில் (ppt - padal petra thala), மேலும் இங்கிருந்து மிக அருகில் திருத்தெளிச்சேரி (ppt) என்னும் கோயில்பத்து ஸ்ரீ பார்வதீஸ்வரர் ஸ்வாமி திருக்கொவில், சில மைல் தொலைவில் உள்ள திருவேட்டக்குடி ஸ்ரீ திருமேணியழகர்- இதுவும் பாடல் பெற்ற தலம்- ஆகிய கோயில்களை தரிசனம் செய்ய நமக்கு மட்டும் அல்லாது நமது சந்ததிகளுக்கும் நலம் விளையும்!
Nearby cities:
Coordinates:   10°55'24"N   79°49'58"E

Comments

  • exlent job realy enjoy.
This article was last modified 12 years ago