sri Punniyakodeeswarar temple, Vadacheri (Vadaseri)

India / Tamil Nadu / Madukkur / Vadaseri / SH-146 : Mannargudy – Pattukkottai - Sethubava chatram Road
 temple, Shiva temple
 Upload a photo

மன்னார்குடி- பட்டுகோட்டை சாலையில் 15கிமி தூரத்தில் உள்ளது வடசேரி.

பிரதான நெடுஞ்சாலையில் இருந்து சற்று உள்ளடங்கி உள்ளது இந்த திருக்கோயில் பத்து ஏக்கருக்கு மேல் விரிந்த தென்னந்தோப்பில் மையமாக உள்ளது இந்த திருக்கோயில்.

நூறாண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலை பெரிய அளவில் திருப்பணிகள் செய்யப்பட்டு தெற்கிலும், கிழக்கிலும் இரு ராஜகோபுரங்கள் கொண்டு விளங்குகிறது கோயில். கிழக்கு பகுதியில் அரசும் வேம்பும் இணைந்த பெரிய மரமும் அதனடியில் சில நாகர்களும் கிழக்கு ராஜகோபுரத்தின் அருகில் உள்ளன.

ராஜகோபுரம் தாண்டியவுடன் கம்பீரமாக நிற்கிறது இறைவனின் கொடிமரம். அதனடியில் விநாயகரும், முன்னால் நந்தி மண்டபமும் உள்ளது.

இறைவன் கிழக்கு நோக்கிய புண்ணிய கோடீஸ்வரர், இறைவி புவனேஸ்வரி. சற்று உயர்ந்த மண்டபத்தில் உள்ளனர்.இறைவனின் வாயிலில் விநாயகரும், தண்டபாணியும் உள்ளனர். இறைவி சன்னதி வாயிலில் இரு துவாரபாலகிகள் உள்ளனர்.

இரண்டாம் பிரகாரமாக உள்ள திருசுற்று இதில் தென்புற மண்டபத்தில் நால்வர், அருணகிரி, ராமலிங்க அடிகள் பட்டினத்தார், நந்தனார், வீரபாகு, ஆதி துர்க்கை, விநாயகர் உள்ளனர்.

சிற்றாலயங்கள், விநாயகர், முருகன், மகாலட்சுமி உள்ளனர். வடகிழக்கில் நவகிரகம், பைரவர் உள்ளனர்.

தைபூசம், முத்து பல்லக்கு சிறந்த திருவிழாக்களாகும்.
Nearby cities:
Coordinates:   10°34'5"N   79°23'4"E
This article was last modified 6 years ago