Kothavasal Sivan Temple (Kothavasal)

India / Tamil Nadu / Peralam / Kothavasal / Ruthragangai road
 Shiva temple  Add category

மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் உள்ள பூந்தோட்டத்தில் இருந்து காரைக்கால் செல்லும் சாலையில் ருத்ரகங்கை கிராமம் வழி தென்புறம் திரும்பினால் கொத்தவாசல் அடையலாம்.

சோமாசிமாற நாயனாருக்கு சோமயாகம் செய்ய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. யாகத்தின் அவிர்பாகத்தை சிவபெருமானே நேரில் வந்து பெறவேண்டும் என விரும்பினார்.
🌤 இறைவனை நேரடியாக அழைக்க வேண்டுமானால், அவரது நண்பர் சுந்தரரின் நட்பை முதலில் பெற வேண்டும் என்று நினைத்தார்.

சுந்தரருக்கு தூதுவளை கீரை மிகவும் பிடிக்கும் என்பதை அறிந்த சோமாசிமாறர் அவருக்கு தினமும் தூதுவளை கீரை கொடுத்து அனுப்பினார். இதைக் கொடுத்து அனுப்புவது யாரென்பது சுந்தரருக்குத் தெரியாது. ஆனால், மனைவி சங்கிலி அம்மையாருக்கு கீரை கொடுத்தனுப்புவது யார் என்று தெரியும்.
🌤 கீரையைக் கொடுத்தனுப்பியவரை பார்க்க வந்தார் சுந்தரர். அப்போது சோமாசி மாறனார், தான் நடத்தும் யாகத்திற்கு இறைவனை அழைத்து வரும்படி சுந்தரரிடம் வேண்டினார்.

சுந்தரரும் அதற்கு சம்மதித்து இறைவனிடம் வேண்ட, இறைவனும், வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் நடக்கும் யாகத்திற்கு வருவதாக வாக்களித்தார்.

அவ்வாறு இறைவன் அம்பல் வரும் வழி இந்த கொற்றவன் வாசல் - பின்னர் மருவி கொத்தவாசல் ஆனது.

சிறிய கிராமம், அறுநூறுக்கு குறைவான மக்கள். கோயிலை சுற்றி நான்கு புறம் தெருக்கள் உள்ளன. கோயில் கிழக்கு நோக்கினும் பிரதான வாயில் தென் புறம் உள்ளது.

இறைவன் தான்தோன்றீஸ்வரர் கிழக்கு நோக்கியும், இறைவி தென்புறம் நோக்கியும் உள்ளனர். பின் புறம் நீளவாக்கில் மண்டபம் இருந்தாலும் அதில் சிலைகள் ஏதும் இல்லை.

கருவறை உள் மண்டபத்தில் இறைவனை ஒட்டி மூன்று சிறியதும் பெரிதுமான விநாயகர்கள். மறுபுறம் முருகன் மற்றும் லட்சுமி நாராயண சிலை உள்ளது. உள்ளேயே பைரவர் சிலையும் உள்ளது. வடபுறத்தில் சண்டேசர் உள்ளார்.

ஒரு கால பூசை மட்டும் நடைபெறுகிறது.
www.facebook.com/vijay.kadambur/media_set?set=a.2435078...

temple.dinamalar.com/en/new_en.php?id=401
Nearby cities:
Coordinates:   10°55'19"N   79°39'21"E
This article was last modified 5 years ago