Thiru rameswaram sivan temple (Thiru Rameswaram)

India / Tamil Nadu / Kuttanallur / Thiru Rameswaram / Mannargudi-Thiruthuraipoondi
 temple, Shiva temple

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி - திருத்துறைப்பூண்டி சாலையில் தட்டாங்கோயில் என்ற ஊரிலிருந்து வடக்கே 4 கி.மீ. தொலைவில் இக்கோயிலைச் சென்றடையலாம்.


கும்பகர்ணன் தனது அண்ணன் ராவணன் வேண்டுகோளினை ஏற்று ராமரை எதிர்த்து போர் செய்ய போர்க்களம் வருகிறான். ராமர் தொடுத்த பாணங்களால் கும்பகர்ணன் தனது இரண்டு கரங்களையும் இழக்கிறான். அப்போது ராமனைப் பார்த்து கும்பகர்ணன், ""ஸ்ரீராமா, நாங்கள் எல்லாரும் போரில் அழிந்துபோன பிறகு எங்கள் மூதாதையருக்கு பிதுர்கடன் கொடுக்க யாரும் இல்லாமல் போய்விடுவார்கள். எனவே எங்கள் சகோதரன் விபீஷணனை கொன்று விடாதே. எங்கள் மூதாதையருக்கு பிதுர்கடன் கொடுக்க, அவன் ஒருவனாவது இருக்கட்டும்'' என்று வேண்டினான்

அதேபோன்று மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்கள் திரௌபதியுடன் காட்டில் வனவாசம் செய்தபோது, ஓரிடத்தில் தண்ணீர் தாகத்தால் திரௌபதி துடித்தாள். அப்போது தருமர், நகுலனை எங்காவது தண்ணீர் கிடைக்கிறதா என பார்த்துவர அனுப்பினார். நகுலன் கொஞ்சதூரத்தில் ஒரு தடாகத்தை பார்த்து பளிங்கு போன்று காணப்பட்ட அந்த தண்ணீரை எடுத்துவர முயன்றான். அச்சமயம், ஓர் அசரீரி குரல் கேட்டது. "எனது கேள்விக்கு பதில் சொல்லாமல் தண்ணீர் எடுத்தால் நீ இறந்து விடுவாய்'' என்றது. அதைப் பொருட்படுத்தாமல் நகுலனும் அதன்பின் ஒருவர் ஒருவராக வந்த சகாதேவன் அர்ச்சுனன், பீமன், ஆகியோர் கேள்விக்கு பதில் சொல்லாமல் குளத்து நீரை குடித்து இறந்து கிடந்தனர். இறுதியாக வந்த தருமர் அந்த கேள்விகளுக்கு சரியான பதில்களைக் கூறினார். அதற்கு அந்த அசரீரி மகிழ்ச்சியடைந்து, ""இங்கு இறந்து கிடக்கும் உனது சகோதரர்களில் ஒருவரை என்னால் திரும்ப உயிர்ப்பித்து தர முடியும். நீ யாரை கேட்கிறாய்'' எனக் கேட்டது. அதற்கு தருமர், நகுலனை மனமுவந்து நீ எனக்கு திருப்பி கொடுப்பாயாக'' என்றார்.

ஆச்சரியத்துடன் அசரீரி "பீமனும் அர்ச்சுனனும் போர்க்களத்தில் யாராலும் வெல்ல முடியாத தலை சிறந்த போர்வீரர்கள், அவர்களை புறந்தள்ளிவிட்டு, வேறொரு தாயின் மகனான நகுலனை ஏன் உயிர் பிழைக்க தேர்ந்தெடுத்தாய்'' என்றது. அதற்கு தருமர், "போர்புரிந்து வெற்றியடைவது மட்டுமே என்து வாழ்க்கையின் முக்கியமான குறிக்கோள் இல்லை. பக்திபூர்வமாக என் பெற்றோர்களுக்கு நான் பணிவிடை செய்ய வேண்டும். எனது தாயாருக்கு பிதுர்கடன் செய்ய நான் இருக்கிறேன். அதுபோல் நகுலனின் தாயாருக்கு பிதுர்கடன் செய்யவே நகுலனை உயிர்ப்பிக்க கேட்டேன். நகுலனின் தாயாருக்கு பிதுர்கடன் செய்ய மகனில்லாத பாவத்தை நான் ஏற்படுத்துவது தர்மம் ஆகாது'' என்றார். "பரந்த மனப்பான்மை உடைய உன்னை போன்றவரை காண்பது அரிதிலும் அரிது. எனவே உனது நான்கு சகோதரர்களையும் உயிர்ப்பித்து உன்னுடன் அனுப்புகிறேன் என்று கூறியது. இதன் மூலம் பிதுர் கடன் கொடுத்தல் எவ்வளவு முக்கியத்துவம் என அறியலாம்.

ஸ்ரீராமர் இலங்கையில் அசுரர்களை அழித்துவிட்டு திரும்பும்போது தனது தந்தைக்கு திதி செய்யாமல் விடுபட்ட பிதுர்கடன் தோஷம் நீங்கவும் பலரை போரில் கொன்றதால் ஏற்பட்ட கொலை பாவமான பிரம்மஹத்தி தோஷம் நீங்கவும் திருராமேஸ்வரம் என்கிற இந்த திருத்தலத்தில் ஸ்ரீ ராமபிரான் ஐந்து நாள்கள் சிவபூஜை செய்தார். தங்கிய நாள்களில் அமாவாசை திதி வந்தபடியால், நித்யகர்ம அனுஷ்டானங்கள் செய்ய நீர் வேண்டி ஸ்ரீராமன் தனது கோதண்டத்தில் பிரம்மாஸ்திரத்தை பூட்டி பூமியில் பாய்ச்ச ஊற்று கிளம்பி குளமாக நிரம்பியது. இதனால் ஏற்பட்ட குளம் பிரம்ம தீர்த்தம் எனவும் ஊற்று எடுத்த இடத்தில் கோதண்டத்தினால் உண்டானதால் அந்த கிணறு கோதண்ட தீர்த்தம் எனவும் வழங்கப்பெற்றது. இந்த பிரம்மா தீர்த்தம் கோயிலின் தெற்கில் பெரியதாக உள்ளதை காணலாம்.

சீதை ராமனை பிரிந்து அசோகவனத்தில் தனித்திருந்த பாவத்தைப் போக்க இந்த தலத்தில் சிவபூஜை செய்ததினால் சிவபெருமான் பார்வதிதேவியுடன் காட்சி தந்திருளினார்.

ஸ்ரீ ராமபிரான் சிவபெருமானிடம் இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் பிதுர், பிரம்மஹத்தி தோஷம் நீங்க வரம் பெற்றார். குறிப்பாக அமாவாசை நாள்களில் (ஆடி, தை விசேஷம்) பிதுர் தர்ப்பணம் செய்ய திருராமேஸ்வரம் மிகவும் சிறந்ததாகும்.

தமிழ் மாதம் மாசி 22-25 சூரிய ஒளி இறைவனின் திருமேனி மீது வீழ்வதை காணலாம்.அதனால் இது பாஸ்கரத் தலம்

.நீத்தார் கடன் பிதுர் பூஜைகள் செய்ய சிறந்த மேற்கு நோக்கியதலம். காசி, இராமேஸ்வரம் செல்ல இயலாதவர்கள் இங்கு வரலாம்.

.மஹாளய பட்ச அமாவாசையில் எல்லா மூதாதையர்களும் சூரிய சந்திர உலகத்துக்கு வருவதால் அனைத்து உறவினர்களுடைய சந்திப்பும் நிகழ்கிறது. அன்று செய்கின்ற தர்ப்பணத்தில் விடுகின்ற எள் மற்றும் தண்ணீரை ஸ்வேதா தேவி என்பவள் மிக எளிதாக இறந்தவர்களது கையில் சேர்த்துவிடுகிறாள்.

சரி வாருங்கள் கோயிலை சுற்றி பார்க்கலாம்
மேற்கு நோக்கிய கோயில்.ஐந்து நிலை முதன்மை கோபுரம் உள்ளது கோபுரத்தின் எதிரில் இரட்டை விநாயகர்கள் தனி சிற்றாலயத்தில் உள்ளனர், தென்புறம் தீர்த்த குளமும் அழகிய கருங்கல் மண்டபம் படிக்கட்டுகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இரு பிரகாரங்கள் கொண்டது.

கோபுர வழி உள்ளே செல்லும்போது முதன்மை கோபுரத்திற்கும் அடுத்த மூன்று நிலை கோபுரத்தின் இடையில் நீண்ட கருங்கல் மண்டபம் உள்ளது இதில் நந்தியும் கொடிமரமும் அதன் விநாயகரும் உள்ளனர். இதில் நாயக்க மன்னர் ஒருவரும் அவரது தேவியாரின் சிலையும் உள்ளன.
கருவறை முன் இடை மண்டபம், மகா மண்டபம் உள்ளன. அழகிய சுற்றாலை மண்டபம் கொண்ட முதல் திருச்சுற்று உள்ளது அதில் வலது புறம் பிரதான விநாயகர் ,நால்வர், சிறிய லிங்கம், அம்பிகை, சனைச்சரன், குட்டியாக ஒரு விநாயகரும் உள்ளனர்.
வடபுறம் முருகன், வள்ளி தெய்வானையுடன், வடகிழக்கு மூலையில் கஜலட்சுமியும், அவரின் எதிரில் அவர் வழிபட்ட லிங்கமும் உள்ளது.
வடகிழக்கு மூலையில் நவகிரகம், காளியம்மன், சூர தேவதை எனும் பெயரில் தவ்வை தெய்வம் சிறிய உருவில் உள்ளது. பைரவர், சந்திரன் சூரியன் ஆகியோரும் உள்ளனர். மேற்கு நோக்கிய மண்டபத்தில் அக்னீஸ்வரர் எனும் லிங்கமும் உள்ளது, தென்புறம் அறுபத்து மூவர் அணிவகுத்துள்ளனர்.

கருவறை கோட்டங்களில் சிற்ப அழகுடன் அர்த்தநாரி, பிச்சாடனர், பிரம்மன், துர்க்கை, தென்முகன் இங்கே நான்கு ரிஷிகளும், அதற்க்கு மேலாக தனது பத்தினிகளுடன் இரு ரிஷிகளும் உள்ளனர். அடுத்து அகத்தியர், விநாயகர் என உள்ளனர். கல்வெட்டுகளும் நிறைந்துள்ளன. இறைவன் சுயம்பு லிங்க மூர்த்தியாக மேற்கு நோக்கி உள்ளார். அம்பிகை இரண்டாம் கோபுர வாயிலில் தெற்கு நோக்கி உள்ளார்.

இறைவன்-ராமநாதசுவாமி
இறைவி - மங்கள நாயகி


தலம், தீர்த்தம், சிற்பம் என பல சிறப்புகள் கொண்ட திருக்கோயிலை நாம் ஒருமுறையாவது கண்டு வணங்க வேண்டாமா வாருங்கள் திருராமேஸ்வரத்திற்கு

Sri Ramanatha Swamy temple
A "Pithru Dosha Nivarthi sthalam". Ramar worshipped Lord Shiva here. Though the transport facility to this place is poor, people come here in large numbers to perform the rituals for their forefathers.A big Tank is there close to the Temple and people perform the rituals on the bank of this Tank. A 5 tier Rajagopuram is standing at the entrance which greets the visitors. The exqusitely carved devakoshtams around the Sanctum tell us about the dedication during Chola Period.
Amman: Mangalambihai
Theertham: Koti theertham
Nearby cities:
Coordinates:   10°40'6"N   79°31'28"E
This article was last modified 7 years ago