Mannargudi Kasi viswanathar temple (Mannargudi)

India / Tamil Nadu / Mannargudi / Pamani road
 temple, Shiva temple
 Upload a photo

பாமணி ஆற்றின் கரையில் பாமணிக்கு செல்லும் பாலத்தின் அருகில் உள்ளது இக்கோயில் திருப்பாற்கடல் எனும் பெரிய குளத்தின் கரையில் உள்ளது.

கோயில் சிறியதாக இருந்தாலும் மூர்த்திகள் விசேடமானவை.

கோபுர வாயிலில் துவாரகணபதி உள்ளார்,சிறிய அளவிலான லிங்க மூர்த்தியாக காசிவிஸ்வநாதர் தெற்கு நோக்கிய விசாலாட்சி சன்னதியை காணலாம். அருகில் கிழக்கு நோக்கியபடி சட்டநாதர் சுண்ணாம்பு சிலையாக உள்ளார்.

பிரகாரத்தில் விநாயகர், ருணவிமோச்சனர் மனோன்மணி அம்பிகையுடன் உள்ளார் அம்பிகையுடன் அருள் தரும் இவரே தீராத ரணம், அதிக கடன், வழக்குகளில் இருந்து விடுபட வழிபடவேண்டியவ்ர்.

திருச்சேறை ருணமூர்த்தியை விட மேலானவர் என்றே சொல்லலாம். அடுத்த சன்னதிகளில் ஏகாம்பரேஸ்வரர்-காமாட்சி சுந்தரேசுவரர்-மீனாட்சி சன்னதிகளும், முருகன், மகாலட்சுமி சன்னதியும் கருடன், ஆஞ்சநேயர், நாகர் மாரியம்மன், நாகர் நால்வர், சேக்கிழார் சிலைகளும் உள்ளன.

கருவறை கோட்டத்தில் இருந்து தனித்து தென்முகன் சன்னதி உள்ளது, லிங்கோத்பவர், பிரமன், துர்க்கை சிலைகள் கோட்டத்தில் உள்ளன.

வட கிழக்கில் நவகிரகம் உள்ளது

அனைத்து மூர்த்திகளும் ஒரே இடத்தில் காணும்படியான திருக்கோயில் இது ஐநூறு ஆண்டுகட்குமேல் பழமையானது
Nearby cities:
Coordinates:   10°40'13"N   79°27'11"E
This article was last modified 7 years ago