Kothanda Ramar kovil temple (Thiru oottathur) | Perumal temple

India / Tamil Nadu / Pullampadi / Thiru oottathur / West street, oottathur
 temple, Perumal temple
 Upload a photo

திருப்பட்டூர் கோவிலுக்கு போயிருந்தேன் .தரிசனம் முடித்த பின் அருகில் வேறு கோவில்கள் ஏதும் உள்ளதா என விசாரித்த போது ஊட்டத்தூரில் இருப்பதாக கூறினார்கள் .அந்த சிவன் கோவிலுக்கு சென்றபோது மணி பன்னிரண்டு ஆகிவிட்டதால் நடை சாத்தப்பட்டு விட்டது .சரி மீண்டும் வருவோம் என ஏமாற்றத்தோடு திரும்பிவரும்போது வழியில் ஒரு கோவில் திறந்திருந்தது .சரி போய் பார்போம் என உள்ளே நுழைந்தோம் .வாசலிலேயே மிக வயதான பட்டாச்சார்யார் அமர்ந்திருந்தார் .உள்ளே நுழைந்ததும் அவரது வீட்டிற்கு வந்தவர்களை அழைப்பவர்களை போல் இருகரம் கூப்பி வணங்கி வரவேற்றார் .மிக தடுமாற்றத்துடன் நடந்தார் .கண்பார்வை சரியாக இல்லை .இருப்பினும் நிதானித்து படிகளில் அவர் வைத்த காலடிகள் அவர் கோவிலின் ஒவ்வொரு புறத்தையும் எவ்வளவு தெளிவாக அறிந்து வைத்திருக்கிறார் என்பதை உணர்த்தியது .கருவறையில் நுழைந்ததும் அவர் அதே லாவகத்தோடு இரண்டு அடியில் எண்ணை செம்பை எடுத்து விளக்குக்கு எண்ணை ஊற்றி தீப்பெட்டியை எடுத்து விளக்கு ஏற்றியதை எண்ணி மிகுந்த ஆச்சர்யபட்டு போனேன்.பார்வை குறைந்தும் ஒவ்வொன்றையும் மிக கவனத்தோடு அவர் கையாள்வதை காண இராமபிரான் எங்களை உள்ளே அழைத்திருக்கிறார் போலும் என மகிழ்ந்தோம் .

இராமபிரான் சீதாபிராட்டியோடும் தமையன் இலக்குவனோடும் காட்சியளிப்பதை காண என்ன புண்ணியம் செய்தனை மனமே என நெஞ்சம் பாடியது .இராமர் கோவில் மிக குறைவான அளவிலேயே உள்ளன.அரசால் ஒரு வணிக நிறுவனம் போலும் ,அதனுடைய தொன்மையை சிதைத்து கருங்கல் சிலைகள் மீதெல்லாம் வர்ணம் பூசி ஒவ்வொன்றுக்கும் ஒருவிலை வைத்து நிர்வகிக்கப்படும் திருபட்டூர் கோவிலின் நிலையை கண்டு மனம் வெறுத்து வந்த எங்களுக்கு இராம பிரான் மிகுந்த நிறைவை அளித்தார் .வணிக மயமாகிவிட்ட கோவில்களுக்கு செல்வதை விட நம்மை வரவேற்கும் இது போன்ற கோவில்களுக்கு சென்றால் கோவில் அர்ச்சகர்களின் வாழ்வதாரத்திற்காவது துணை புரிந்து இறையருள் பெற மாட்டோமா ?
Nearby cities:
Coordinates:   11°4'25"N   78°51'14"E
This article was last modified 10 years ago