sree aathimoolanAthar temple, - thiruppAttrurai,

India / Tamil Nadu / Lalgudi / பனையபுரம் -திருவானைக்கா சாலை
 temple, thevara paadal petra sthalam

NCN059 - sree aadimoolEshwarar along with mEgalAmbigai temple,thiruppAlathurai is 59th thEvAra temple of chOzha dhEsh(nAadu) located in north shore of river Cauveri. Also named as thirupAtrurai, tirupAlathurai. PT child boon - worshiping ambAL sree mEgalAmbikai to get blessed with children.SrPT - Soorya pooja performed to the lord in the month of purattAsi/palguni.

temple.dinamalar.com/New.php?id=116

Route: thirupaatrurai is about 10 east from thiruvAnaikkA. One should be reach panaiyapuram from trichi main gate.

மக்கள் வழக்கில் திருப்பாலத்துறை என்று வழங்குகிறது.இங்குள்ள "அம்பிகையை நெஞ்சுருகி வழிபட்டால் மகப்பேறு கிட்டும்" என்று நம்பப்படுகிறது.மூலவர் சுயம்பு திருமேனி - சிறிய மூர்த்தி.
அர்த்த மண்டபத்தில் சிற்ப வேலைப்பாடுகளுடன் நான்கு தூண்கள் விளங்கி, "தேவசபை" என்றழைக்கப்படுகிறது.கல்வெட்டில் இத்தலம் "கொள்ளிடம் தென்கரை நாட்டுப் பிரமதேயமான உத்தமசீவி சதுர்வேதி மங்கலத் திருப்பாற்றுறை" என்றும் இறைவன் "திருப்பாற்றுறை மகாதேவர்" என்றும் குறிக்கப்பட்டுள்ளது.முதற்பராந்தகன், விக்கிரமசோழன் காலத்திய இக்கல்வெட்டுக்களில் ஒன்றின் மூலம் கோயிலருகில் திருநாவுக்கரசர் திருமடம் இருந்ததாக அறிகிறோம்.srisambandhar 's hymn is there for this temple!

இப்பகுதியை ஆண்ட சோழன், இவ்வழியாக வேட்டைக்கு சென்றபோது தன் படைகளுடன் சற்று நேரம் ஓய்வெடுத்தான். அப்போது அருகிலுள்ள புதரில் இருந்து பொன்னிற அதிசய பறவை பறந்து சென்றது. மன்னன் அப்பறவையின் மீது ஆசைகொண்டு அம்பு எய்தான். ஆனால், தப்பி விட்டது. சிலநாட்கள் கழித்து மன்னன் மீண்டும் இவ்வழியாக சென்றபோது, முன்பு பார்த்த அதே பறவை பறப்பதைக் கண்டான். புதர் தானே அதன் இருப்பிடம், அங்கு வந்ததும் பிடித்து விடலாம் எனக்கருதி மறைந்திருந்தான். அந்த இடம் முழுதும் பால் மணம் வீசியது. பறவை வரவே இல்லை.சந்தேகப்பட்ட மன்னன் புதரை வெட்டினான். ஒரு புற்று மட்டும் இருந்தது. புற்றை தோண்டியபோது, பால் பீறிட்டது. பயந்த மன்னன் அரண்மனைக்கு திரும்பி விட்டான். அன்றிரவில் அவனது கனவில் அசரீரியாக ஒலித்த சிவன், பால் வெளிப்பட்ட இடத்தில் தான் லிங்க வடிவில் இருப்பதாக கூறினார். அதன்பின் மன்னன் இவ்விடத்தில் கோயில் கட்டி வழிபட்டான்.

பால் பொங்கிய இடத்தில் இருந்து வெளிப்பட்டதால், சுவாமி "பாற்றுறை நாதர்' என்றும், தலம் "பாற்றுறை' (பால்துறை) என்றும் பெயர் பெற்ற மக்கள் வழக்கில் திருப்பாலத்துறை என்று வழங்குகிறது.இங்குள்ள "அம்பிகையை நெஞ்சுருகி வழிபட்டால் மகப்பேறு கிட்டும்" என்று நம்பப்படுகிறது.

மூலவர் சுயம்பு திருமேனி - சிறிய மூர்த்தி.
அர்த்த மண்டபத்தில் சிற்ப வேலைப்பாடுகளுடன் நான்கு தூண்கள் விளங்கி, "தேவசபை" என்றழைக்கப்படுகிறது.கல்வெட்டில் இத்தலம் "கொள்ளிடம் தென்கரை நாட்டுப் பிரமதேயமான உத்தமசீவி சதுர்வேதி மங்கலத் திருப்பாற்றுறை" என்றும் இறைவன் "திருப்பாற்றுறை மகாதேவர்" என்றும் குறிக்கப்பட்டுள்ளது

.முதற்பராந்தகன், விக்கிரமசோழன் காலத்திய இக்கல்வெட்டுக்களில் ஒன்றின் மூலம் கோயிலருகில் திருநாவுக்கரசர் திருமடம் இருந்ததாக அறிகிறோம்
கருவறை நுழைவாயில் மேல் மகரதோரணத்தில் சயனக்கோலம் போல் காட்டப்பட்டுள்ளது பற்றி அறியமுடியவில்லை, மேலும் தல வரலாற்றினை விளக்கும் சிற்ப்பங்களும் அந்த நுழைவாயிலில் உள்ளன.

இங்குள்ள இடது புற துவார பாலகரின் சிலை அற்புதமாக உள்ளது அதில் அவர் வைத்திருக்கும் தண்டத்தின் மீது ஒரு முதலை ஏறுவது காட்டப்பட்டுள்ளது என்றால் அவர் எத்தனை பெரியவராக இருத்தல் வேண்டும்

கருவறை கோட்டத்தில் வீணாதர தட்சணாமூர்த்தி, சங்கரநாராயணர்சிற்பம் திருஒடேந்து செல்வர் நான்முகன், விஷ்ணு துர்க்கை சிற்பங்கள் மிகசிறப்பானது தொன்மை வாய்ந்ததும் ஆகும்.

பள்ளத்தூர் நகரத்தாரால் நிர்வகிக்கப்படும் திருக்கோயில் இதுவாகும், திருச்சி அருகே உள்ளது,எனினும் ஒரு கால பூசை மட்டும் நடைபெறுவது வருந்த தக்கது,
Nearby cities:
Coordinates:   10°50'45"N   78°46'8"E

Comments

  • route: one can reach the temple from thiruvAnaikka thru kallaNai road to get down at panaiyapuram from here the temple is around 2kms towards kollidam river.
This article was last modified 7 years ago