Sambanthar Sivan Temple | Shiva temple

India / Tamil Nadu / Mayiladuthurai / மயிலாடுதுறை-கும்பகோணம் சாலை
 temple, Shiva temple

மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் உள்ள தொடர்வண்டி மேம்பாலத்தினை தாண்டி ஒரு கிமி தொலைவில் இடதுபுறம் சம்பந்தர் கோயில் எனும் ஒரு அலங்கார வளைவு உள்ளது.
அதனுள் நுழைந்தால் இடதுபுறம் அழகிய மூன்று நிலை ராஜகோபுரத்துடன் உள்ளது சம்பந்தர் கோயில் எனப்படும் பிரம்மபுரீஸ்வரர் கோயில்.
மேற்கு நோக்கிய திருக்கோயில் எதிரில் பெரிய குளம் ஒன்றுள்ளது கோயிலின் அருகில் இ.ச.அறத்துறை இணை ஆணையர் அலுவலகம் உள்ளது.

மூவலூரை வழிபடவந்த சம்பந்தர் கண்ணுக்கு வழியெங்கும் லிங்கமாக தென்பட அவர் இக்குளக்கரையில் நின்று மூவலூர் மார்க்கசகாயரை வணங்கினார் என்பது வரலாறு கருவறை மேற்கு நோக்கி உள்ளது அதன் வாயிலின் வலது புறம் கை கூப்பிய நிலையில் திருஞானசம்பந்தர் உள்ளார்.
உள்ளே நுழைந்தவுடன் இரு பெரிய துவாரபாலகர்கள் உள்ளனர். வலது மூலையில் விநாயகரும், இடது புறம் முருகன் சன்னதியும், அடுத்து உள்ளடங்கிய இடத்தில லிங்க பாணமும், அப்பர் சுவாமியும், பிள்ளையார், நாகர் மகாலட்சுமி பைரவர், விசுவநாதர் விசாலாட்சி என ஒரு தொகுப்பாக உள்ளது.
பிரகாரத்தின் பின்புறம் சன்னதிகள் ஏதுமில்லை

கருவறை அர்த்த மண்டபத்தின் வடக்கு, தெற்கு சுவற்றில் கருங்கல்லினை வட்டமாக குடைந்து சில எழுத்துக்களை வடிவமைத்துள்ளனர் வட புறம் சம்பந்த சாமி என்றும் தென்புறம் ஸ்ரீ திரிபுரசுந்தரி என்றும் உள்ளது
Nearby cities:
Coordinates:   11°5'22"N   79°37'2"E

Comments

This article was last modified 8 years ago