Komuktheeswarar Sivan Temple Govindakudi (Govindakudi)

India / Tamil Nadu / Swamimalai / Govindakudi / Avoor road
 temple, Shiva temple

கும்பகோணம்அருகில் உள்ள பட்டீஸ்வரம்- ஆவூர் சாலையில் உள்ளது இந்த கோவிந்த குடி

இத்தளம் வசிஷ்ட்ட முனிவரால் பூசிக்கப்பட்டது. ஒரு முறை வசிஷ்ட்ட முனிவர் தென் நாட்டில் உள்ள தளங்களை தரிசிக்க வந்த பொது இத்தல இறைவனை அபிஷகம் செய்து பூசிக்க எண்ணினார். அதனால் இறைவன் காமதேனுவை இங்கு அனுப்பியதாக தலவரலாறு சொல்கிறது. காமதேனு வந்த காரணத்தால் இந்த ஊர் கோ வந்த குடி எனப்பட்டு தற்போது கோவிந்தகுடி என அழைக்கப்பட்டு வருகிறது.

கிழக்கு நோக்கிய மூன்று நிலை கோபுரத்துடன் உள்ளது கோயில். கோபுர வாயிலில் வடக்கு நோக்கி சூலினி துர்க்கை தனி கோயில் கொண்டுள்ளார்.
ஒற்றை பிரகாரத்துடன் உள்ள கோயில் இறைவன் எதிரில் கொடிமரம் உள்ளது அருகில் விநாயகர் கருவறை வாயிலில் உள்ளார். பிரகாரத்தில் நால்வர் சிலைகளும், கோட்டத்தில் நர்த்தன விநாயகரும்,தட்சணாமூர்த்தியும், லிங்கோத்பவரும், பிரம்மாதுர்க்கையும் உள்ளனர்.இதில் தட்சணாமூர்த்தி தனி விமானம் கொண்டு விளங்குகிறார்.
மேற்கில் உள்ள திருமாளிகை பத்தியில் இரட்டை விநாயகர், விசுவநாதர் தேனு லிங்கம், வசிட்டர் வழிபட்ட லிங்கம், காமதேனு, வழிபட்ட லிங்கம் ஆகியவை உள்ளன.
சண்டேசர மற்றும் அருகில் ஒரு வில்வமரம் ஒன்றும் உள்ளன.
Nearby cities:
Coordinates:   10°54'37"N   79°20'9"E
This article was last modified 7 years ago