Manjamalli sivan temple (Manjamalli)

India / Tamil Nadu / Aduturai / Manjamalli / avaniyapuram road
 temple, Shiva temple

ஆடுதுறை-அவனியாபுரம்-மஞ்சமல்லி என வருதல் வேண்டும்

முருகப்பெருமான் ஓராயிரம் பூதகணங்களும், இந்திரனும், தேவர்களும், வீரவாகு தேவர் முதலிய நவவீரர்களும் சூழ்ந்து வர சேய்ஞலூரை வந்தடைந்தார். அங்கே சிவபெருமானைப் பூசித்துப் பாசுபதத்தைப் பெற்றார். அதனால் முருகப் பெருமான் மகிழ்ச்சியுற்று திருவிடைமருதூர் வருகையில் நஞ்சையும், புஞ்சையும் பொன்னி நீரால் பொலிவுற்று விளங்கும் கிராமத்தைக் கண்டு, தாம் நித்திய சிவபூசை செய்ய ஏற்ற இடம் இதுவே என மகிழ்ந்தார். மேலும் வீரமகேந்திரபுரியில் உள்ள சூரனைப் போர் புரிந்து அவனை அவனுடைய சுற்றத்தோடும் அழிக்க எண்ணி, அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானைப் பூசித்தார். கந்தனின் பூசையில் மகிழ்ந்த சிவபெருமான், மந்திரப் பொருளை உபதேசித்து, "இம்மந்திரம் சூரனை வெல்ல துணை செய்யும்" என்று அருளினார். முருகனுக்கு மந்திரப் பொருளை உபதேசித்தமையால், இவ்விறைவர் மந்திரபுரீஸ்வரர் என்று திருநாமம் கொண்டு விளங்குகின்றார்.

முருகப்பெருமான் இத்தல தீர்த்தத்தில் நீராடி மந்திரபுரீஸ்வரரை வழிபட்டதால், இத்தல தீர்த்தம் கந்ததீர்த்தம் எனத் திகழ்கிறது. இத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றாலும் சிறப்புடையத் தலமாகும். இக்கோயில் திருவாடுதுறை மடத்தின் கட்டுபாட்டில் உள்ளது.

இறைவன்-மந்திரபுரீஸ்வரர்
இறைவி- பெரிய நாயகி

விநாயகர் முருகன் தனி சிற்றாலயங்களில் உள்ளனர். மகாலட்சுமி சன்னதி இங்கில்லை. வடக்கில் பெரிய குளம் ஒன்று கந்த தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது
Nearby cities:
Coordinates:   11°0'41"N   79°30'9"E
This article was last modified 8 years ago