sree sOmErswarar temple,achuthamangalam

India / Tamil Nadu / Nannilam /
 temple, Shiva temple

TVT135 sOmEsam29 - sree sOmEswarar temple, achuthamangalam is one of the one of the thEvAra vaippu sOmEsam temples.
This temple was built 1500 years ago by the Chola king Achuta Cholan. Hence the village got the name ACHUTHAMANGALAM. This temple is a very ancient temple and has 4 Pragaras. The temple wall has lot inscriptions in the TAMIZH language. It is believed that there is a underground tunnel which is near the main deity and connects all the way to Thamarai Kulam (which is around 500 meters away from the temple). The famous Nayanmar Thiru Sekkizhaar has sung about this sthala [Kalyana Sundareswarar Sannidhi] and is believed to be Thirumana Parikara sthalam.சன்னாநல்லூர்-அ ச்சுதமங்கலம் என வரலாம் இவ்வூரில் மூன்று சிவாலயங்கள் இருக்கின்றன. சோமேஸ்வரர்,காசி விஸ்வநாதர், .....

சோழ ராஜகுருக்கள் கோயில் நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டிருந்ததையும் கல்வெட்டுகள் மூலமாக அறிய முடிகிறது. அத்தகைய கல்வெட்டுகள் அனைத்தும் கிரந்தக் கல்வெட்டுக்களேயாகும். இந்த ராஜகுருக்கள் ராடதேசம், கெளடதேசம் போன்ற பகுதிகளிலிருந்து வந்தவர்கள். இப்பகுதிகள் மேற்கு வங்காளத்தில் உள்ளன.

முதலாம் இராஜ ராஜ சோழனது ராஜகுரு தஞ்சைப் பெரிய கோயில் கலசத்தைத் தானமளித்தார். அச்சுதமங்கலத்தில் ஶ்ரீகண்ட சம்பு என்ற குரு அவ்வூர்க்கோயிலைக் கட்டினார். இவரது மகன் ஈச்வர சிவர் என்ற சோமேஸ்வரர் மூன்றாம் குலோத்துங்கனுக்கு ராஜகுருவாக விளங்கினார். அவர் கட்டிய திரிபுவனம் கோயிலில் சிவனையும் பார்வதியையும் பிரதிஷ்டைச் செய்தார். ராஜகுரு ஈச்வரசிவர். அச்சுதமங்கலம் கோயிலைக் கட்டிய ஶ்ரீகண்ட சம்புவின் புதல்வர் சைவ தர்சனங்களை முழுவதும் அறிந்தவர். 18 வித்தைகளைக் கற்றவர். உபநிஷதங்களுக்கு விளக்கம் அளிக்க வல்லவர். இவர் எழுதிய நூல்தான் சித்தாந்த ரத்னாகரம் என்ற சைவ சமயத்தைப் பற்றிய நூலாகும்.

நாச்சியார் கோயில் நன்னிலம் நெடுஞ்சாலையில் திகழும் இவ்வூரின் நடுவண் சோமநாத சுவாமி திருக்கோயில் என்ற பெயரில் அழகு வாய்ந்த சோழர்கால திருக்கோயில் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது. பேரெழில் வாய்ந்த கோஷ்ட சிற்பங்களும், ஆலயம் முழுதும் காணப்பெறுகின்ற சோழர் கல்வெட்டுகளும் இக்கோயிலின் பெருமைக்குக் காரணமாய் விளங்குகின்றன.

நான்கு நிலை ராஜகோபுரம் கிழக்குத் திசை நோக்கியவாறு காட்சியளிக்க திருமதில், திருமண்டபங்கள், பரிவாராலயங்கள், அம்மன் ஆலயம் என அழகான கட்டமைப்புகளோடு சோழர் கால கோயிற் கட்டிடக் கலை க்கு சிறந்த எடுத்துக்காட்டாக இவ்வாலயம் விளங்குகின்றது. ஸ்ரீவிமானம், அர்த்த மண்டபம், முகமண்டபம், மகாமண்டபம் ஆகியவற்றோடு மூலவர் திருக்கோயில் திகழ்கின்றது.

கருவறையில் சோமநாத சுவாமி லிங்க உருவில் அருள்பாலிக்க உமாபரமேஸ்வரி நின்ற கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் அம்மன் ஆலயத்தில் அருள் பாலிக்கின்றாள்.

மகாமண்டபத்து தூண்கள் அனைத்தும் குலோத்துங்க சோழன் எடுத்த ஆலயங்களில் திகழும் தூண்களை ஒத்த கலை நயத்துடன் விளங்குகின்றன. பிரணாளம் எனப்பெறும் அபிடேக நீர் வெளியேறும் பகுதியில் காணப்பெறும் சிற்ப அமைப்பு கலை நயத்துடன் துலங்குகிறது. பக்கவாட்டில் சங்கு ஊதும் பூதகணம் திகழ, ஒரு பூதத்தின் பிளந்த வாயிலிருந்து நீர் வெளியே
கொட்டும் வகையில் அச்சிற்பம் காணப்பெறுகின்றது.

கருவறை வாயிலின் இருமருங்கும் திகழும் துவாரபாலகர் சிற்பங்கள் இரண்டும் கலையழகோடு காணப்பெறுகின்றன. மகா மண்டபத்துத் தூண்களில் வீணை இசைக்கும் பெண்களின் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.

குடமுடைய வீணையை ஒரு பெண் மார்பில் அணைத்த வண்ணம் அதனை இசைக்க ஒரு ஆண் அருகே நின்றவாறு மத்தளம் இசைக்கின்றான். எதிர்புறம் ஒரு பெண் வேலைப்பாடுடைய வீணையை இசைக்க ஒரு ஆண் மத்தளத்தையும், ஒரு பெண் கரடிகை என்னும் வாத்தியத்தையும் இசைக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.

பிராகாரத்தில் திகழும் கோஷ்டங்களில் 14 எழிலார் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. கணபதி பெருமான் ஆடுகின்றாராகக் காணப்பெறுகின்றார். சிவபெருமான் ஒரு காலைத் தலைக்கு மேல் உயர்த்தியவாறு ஊர்த்துவத்தாண்டவம் ஆடுகின்றார். அவர் தம் காலடியில் நந்தியம் பெருமாள் குடமுழவமொன்றை இசைக்கின்றார்.

ஒருபுறம் ஆனை உரித்த தேவராக ஈசனும் காணப்பெறுகின்றார். தன் இருகரங்களால் கிழித்த யானை உடலை தூக்கிப் பிடித்தவாறும் கபாலம், சூலம், மான், மழு ஆகியவற்றை மற்ற கரங்களில் தரித்தவாறும் யானையின் தலைமீது ஒரு காலை ஊன்றி ஒரு கோஷ்டத்தில் தட்சிணாமுர்த்தி வீணாதாரராக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றார்.

மேற்குபுற கோஷ்டத்தில் பிரம்மனும் காணப்பெறுகின்றனர். மற்ற கோஷ்டங்களில் சண்டீச அனுக்கிரகமூர்த்தி, பிட்சாடணர், கங்காளர், இடபத்துடன் அர்த்த நாரீஸ்வரர், வில்லேந்திய திரிபுராந்தகர், வேடுவன் வடிவில் கிராதார்ஜுனன், கல்யாணசுந்தரர் ஆகிய சிவக் கோலங்களை நாம் தரிசிக்க முடிகின்றது. உமையவள் திருக்கரம் பற்றி நிற்கும் சிவபெருமானின் திருக்கல்யாண கோலவடிவத்தைக் காண இரு கண்கள் போதாது.

பிற்காலச் சோழர் கலை மரபின் உச்சத்தைத் தொட்ட திருக்கோயில்களின் வரிசையில் ஒன்றாகத் திகழும் அச்சுதமங்கலம் சோமநாதர் திருக்கோயில் மூன்றாம் குலோத்துங்க சோழனின் ராஜகுருவான ஸ்ரீகண்டசம்பு எனப்பெறும் சுவாமி தேவரால் 1182ம் ஆண்டில் எடுக்கப்பெற்ற ஆலயம் என்பதை இவ்வாலயத்து கல்வெட்டுச் சாசனம் ஒன்று எடுத்துரைக்கின்றது. கங்கை கொண்ட ராஜேந்திர சோழனின் குருவான ஈஸ்வரசிவர் என்பார் எவ்வாறு விழுப்புரம் அருகில் உள்ள எசாலம் சிவாலயத்தை எடுத்தாரோ அதேபோன்று சுவாமி தேவர் இவ்வாலயத்தை தன் சொந்தப் பொறுப்பில் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவர் மகனான ஈஸ்வரசிவர் என்பார் குலோத்துங்கனால் எடுக்கப்பெற்ற திரிபுவனத்து வீரேச்சரத்தையும், திருவாரூர் கிழக்கு ராஜகோபுரத்தையும் கடவுள் மங்கலம் செய்து புனிதமுடையதாக்கினார் என்பதை அங்குள்ள கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன. ஈஸ்வரசிவர் எழுதிய நூல்தான் சித்தாந்த ரத்தினாகரம் என்ற அரும் பெரும் சைவநூல் என்பதையும் மேற்குறித்த கல்வெட்டுச் சாசனம் கூறுகின்றது.

அச்சுதமங்கலம் சோமநாததேவர் திருக்கோயில் ராஜகோபுர வாயிலில் தோளில் நீண்ட கோலுடனும், இருபுறமும் பாத்திரங்கள் தொங்கவிடப்பட்ட உரிகளுடனும் காணப்பெறும் காவடியைத் தாங்கியவாறு, தன் வலக்கரத்தில் கவையுடன் கூடிய காவடி தாங்கும் கோலினைப் பற்றியவாறு நிற்கும் சோமநாத ஆண்டார் என்பாரின் திருவுருவம் காணப்பெறுகின்றது. இச்சிற்பம் சுவாமி தேவரின் திருவுருவமாக இருத்தல் கூடும்.

இவ்வாலயத்துக் கல்வெட்டுகள் பலசுவையான வரலாற்றுத் தகவல்களை எடுத்துரைப்பவையாகத் திகழ்கின்றன. இவ்வாலயத்து கிழக்குப் பிராகாரத்தில் உள்ள மண்டபத்தில் மூன்றாம் குலோத்துங்கன் மூவர் முதலிகள் மற்றும் சேக்கிழார் பெருமானின் திருவுருவச்சிலைகள் இடம் பெற்றுள்ளன.

அருகிலுள்ள திருவாஞ்சியம் ஸ்ரீவாஞ்சிநாதப் பெருமான் ஆலயத்தில் உள்ள மூன்றாம் குலோத்துங்கனின் கல்வெட்டில் அப்பெருமன்னன் அச்சுதமங்கலம் சிவாலயத்தில் ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் முதலிகளுக்கும், தொண்டர்சீர் உரைத்தாருக்கும் (சேக்கிழார் பெருமானுக்கும்) திருவுருவங்கள் அமைத்து வழிபாடு செய்தமை குறிக்கப்பெற்றுள்ளது. அவைதாம் இங்கு காணப்பெறும் திருவுருவச் சிற்பங்கள் என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.

தெய்வச் சேக்கிழார் பெருமானைத் தில்லைக் கோயில் கல்வெட்டுகள் தொண்டர்சீர் பரவுவார் எனக் குறிப்பிடும் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றை உரைத்தவர் என்பதால் திருவாஞ்சியம் கல்வெட்டு அவரை தொண்டர்சீர் உரைத்தார் எனக் குறிப்பிடுகின்றது. தில்லை மேற்கு கோபுர வாயிலில் காணப்பெறும் சேக்கிழார் பெருமானின் திருவுருவ சிற்பம் எவ்வாறு திகழ்கின்றதோ அதனை ஒத்தே இங்கு காணப்பெறும் சேக்கிழாரின் திருவுருவமும் உள்ளது.

கல்வெட்டுகளில் இவ்வாலயம் பனையூர் நாட்டு சிவபாத சேகரமங்கலமான அச்சுதமங்கலத்து சோமநாததேவர் திருக்கோயில் என்றே குறிக்கப்பெறுகின்றது. இவ்வூரின் ஒருபகுதி சேவூர் என்றழைக்கப்பெற்றதையும், இங்கு சேக்கிழான் வளவதரையன் நிலம் என்ற பெயரில் நிலம் இருந்தமையையும் ஒரு கல்வெட்டு எடுத்துரைக்கின்றது. சேக்கிழாரின் முன்னோர்கள் சோழநாட்டில் வாழ்ந்த சேவூர் இவ்வூர் தான் என்பது ஆய்வாளர்கள் தம் கருத்தாகும்.

இவ்வாலயத்துக் கல்வெட்டுகள் வாயிலாக இக்கோயிலில் பணிபுரிந்த கல்தச்சர்களாகிய சிற்பிகள் பற்றி அறிய முடிகிறது. குலோத்துங்க சோழப் பெருந்தச்சன், ஐநூற்றுவ பெருந்தச்சன், ஈஸ்வர தேவ பெருந்தச்சன் ஆகிய சிற்பிகளோடு மேலும் மூவர் பணிபுரிந்தனர் என்பதறிய முடிகிறது. அம்மா கலைஞர்களே இவ்வாலயத்து எழிலார் சிற்பங்களைப் படைத்தவர்கள் என்பதறியலாம்.

மன்னனின் பெயரில் அமைந்த குலோத்துங்க சோழப் பெருந்தச்சன் என்ற விருதும், மன்னனின் ராஜகுருவான சோமேஸ்வரர் (இவர் அச்சுதமங்கலம் கோயிலை எடுத்த சுவாமி தேவரின் மகனார் ஆவார்.) பெயரில் சோமேஸ்வர பெருந்தச்சன் என்ற விருதினையும் பெற்றவர்கள் என்பதை நோக்கும்போது அவர்கள் பெற்ற பெருஞ்சிறப்பு பற்றி அறிகிறோம்.

இவ்வூரின் வழி பாய்ந்தோடும் காவிரியின் கிளை நதி ‘முடிகொண்ட சோழப் பேராறு’ என அழைக்கப்பெற்றதையும், அவ்வாற்றின் நீரால் பாசனம் பெறும் ஊர்கள் பற்றியும் இங்குள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன. ஆற்று நீர் பாசன பூசலில் உயிர்துறந்த ஒருவருக்காக சோழ அரசன் ‘உதிரப் பட்டி’ என்ற பெயரால் நிலம் அளித்ததை இவ்வாலயத்துக் கல்வெட்டுச் சாசனமொன்று விரிவாக எடுத்துக் கூறுகின்றது.

அச்சுதமங்கலத்தின் ஒரு பகுதியாக விளங்கிய சோமநாதமங்கலத்து மகாசபையார் தங்கள் ஊர் பொதுநிலமொன்றினை வைத்திய விருத்திக்காக (மருத்துவ மனையை செயல்படுத்த) அளித்ததை ஒரு கல்வெட்டு எடுத்துரைக்கின்றது.

அச்சுதமங்கலத்து ஆலய கல்வெட்டுகளைத் தொகுத்து நோக்கும்போது திருக்கோயில் நிர்வாகம், வழிபாடு, திருவிழாக்கள் ஆகியவை பற்றி மட்டுமே பேசாமல் பல சமூக நிகழ்வுகள், கலைஞர்களைப் போற்றிய பாங்கு, நீர் மேலாண்மை பற்றிய செய்திகள், வீதிகளை விரிவுபடுத்தி சாலைகள் அமைத்தமை, அப்பணிகளால் நிலமிழந்தவர்களுக்கு உரிய நிலங்கள் அளித்தமை, மருத்துவம்பற்றிய செயல்பாடுகள் எனப் பல்வேறு செய்திகள் பற்றியும் பல தரவுகளைக் கூறி நிற்கின்றன.
Nearby cities:
Coordinates:   10°53'1"N   79°34'43"E

Comments

  • happy to your post! what could we do regain our prosperity!?
This article was last modified 6 years ago