sree nithyakalyAna suntharEswarar temple, thirunedungalam, (Tiruchirappalli Metro Area)

India / Tamil Nadu / Lalgudi / Tiruchirappalli Metro Area / Thirunedungulam Main Road
 temple, Shiva temple, thevara paadal petra sthalam

SCN008 sree nedungala nAthar along with sree oppilA nAyaki temple, thirunedunkalam is 8th thEvAra temple of chOzha dhEsh(nAdu) located in south shore of river Cauveri.SrPT - soorya pooja performed during 7-12th days month aashAda month.thirunattAngulam is local name of this place.TPuT - thirupugazh temple.

temple.dinamalar.com/en/new_en.php?id=571
Location: On the route tanjur-trichy to take turn at thuvAkudi. Buses to mAngAvanam from thiruchi are going thru Thiru Nedunkulam.

திருச்சி மாவட்டம், திருநெடுங்களம் சிவன்கோயில்
புதுப்பித்தது: 10 விநாடிகளுக்கு முன்பு
திருச்சி மாவட்டத்தில் துவாக்குடியிலிருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

இறைவன் நித்தியசுந்தரர்;
இறைவி ஒப்பிலா நாயகி.

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள எட்டாவது சிவத்தலமாகும்.

தவஞ்செய்த அம்பிகையை இறைவன் கள்ள உருவில் தோன்றி கந்தர்வ மணம் செய்ய முற்பட , அச்சமுற்று அம்பிகை ஓடியொளிந்த இடம் என்பதால் ஒளிமதிச்சோலை என்று வழங்குகிறது.

வங்கிய சோழன் எனும் மன்னனுக்கு சிவபெருமான் தரிசனம் தந்த தலம்.

அபிதான மணிமாலை எனும் நூலில் நெடுங்களம் என்றால் ஒட்டகம் என பொருள் தரப்பட்டுள்ளது அதனால் இத்தளம் ஒட்டகம் பூசித்ததாக இருக்கலாம்.



நெடுங்களப் பதிகத்தில் வரும் பாடற் கருத்துக்கள் அனைத்தும் ராஜ கோபுரத்தில் முன்னும் பின்னும் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

மூலத்தானத்தின் மேல் இரு விமானங்கள் அமைந்து புதுமையாகக் காட்சியளிக்கின்றன.



இக்கோயிலின் நவக்கிரக சந்நிதியில் (பதினொன்று திருவுருவங்கள்) சூரியனாரின் திருவுரு தமது இரு மனைவியரோடு மேற்கு திசை நோக்கியும் ஏனைய எட்டு கிரகங்களின் திருவுருவங்கள் சூரியனாரை நோக்கியும் காட்சி தருவதாக அமைந்துள்ளது.



இக்கோவிலிலுள்ள கல்வெட்டில் இத்தலம் "பாண்டிகுலாசினி வளநாட்டு வடவீர நாட்டு திருநெடுங்களம்" என்றும், இறைவன் பெயர் "நெடுங்களத்து மகாதேவர் " என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

இத்தலத்தில் 30க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன

ஈசன் ஒரு பாதியாகவும், உமையவள் ஒரு பாதியாகவும் திகழும் அர்த்தநாரீஸ்வரர் திருவுருவத்தை பார்த்திருக்கிறோம். ஆனால், திருநெடுங்களம் தலத்தில் பார்வதி தேவி அருவமாய் ஈசன் கருவறையில் இருப்பதாக ஐதீகம்.

இத்திருத்தலத்தில் பார்வதி தேவி சிவனை எண்ணி தவம் செய்து கொண்டிருந்தாள். அவளுக்கு தரிசனம் தந்த ஈசன், அன்னை மீது பெருங்காதல் கொண்டவராய் தன்னருகே அமர்த்திக் கொண்டார். அவ்வாறு ஈசன் அன்னையிடம் காதல் மிகுத்து அருளிய தலம் என்பதால்தான், தன் கருவறையில் உமையவளுக்கு இடம் அளித்து, தான் சற்றுத் தள்ளி அமர்ந்துள்ளார். காசியைப் போன்றே கருவறையின் மேல் இரு கோபுரங்கள் இங்குள்ளன. இந்த கோபுரங்கள் தட்சிண விமானம், கையிலாய விமானம் என்று அழைக்கப்படுகின்றன.

ஆண்டுதோறும் சிவபெருமான் மீது ஆடி மாதத்தில் சூரியக்கதிர்கள் படுமாறு அமைக்கப்பட்ட சிறப்பு கொண்டது.

ஆடி மாதம் முதல் பத்து நாட்கள் திருநெடுங்களநாதர் மீது சூரிய கிரணங்கள் விழுகின்றன. இந்த நேரத்தில் மாதுளை முத்துக்களால் இறைவனை அர்ச்சித்தால், தீராத வினைகளும் தீரும் என்பார்கள்.

கருவறையின் வெளிப்புறத்தில் தெற்கு பக்கத்தில் தேவகோட்டம் அமைந்துள்ளது. இதில் யோக தட்சிணாமூர்த்தி தீச்சுடரை கையில் தாங்கிக் கொண்டு, இடது காலைத் தொங்கவிட்டு, அதன் மேல் வலது காலை மடக்கி அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார்.

யோகப் பட்டம் இடது காலை சுற்றி வருவது போல காட்டப்பட்டுள்ளது. இவருக்குக் கீழ் இரு முனிவர்கள் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார்கள். அவருக்கு எதிர் திசையில் அப்பு லிங்கம், வாயு லிங்கம், கோப்பு லிங்கம் மற்றும் சப்த கன்னியர்கள் கொலுவிருக்கிறார்கள்.

சிற்ப உரல் ஒன்று கோயிலின் உள்ளே உள்ளது. இந்த உரலை பார்வதி தேவி பயன்படுத்தினாராம். இத்தலத்தில் சிவ தியானத்தில் ஈடுபட்டிருந்தபோது, இந்த உரலில் மஞ்சள் இடித்து, மாவாக்கி அதனைப் பூசிக்கொண்டு குளித்தார் என்கிறது புராணம். திருமணத்திற்காகக் காத்திருக்கும் பெண்கள், விரைவில் திருமணம் நடைபெறவும், சிறந்த வாழ்க்கைத் துணை அமையவும் வேண்டிக்கொண்டு சிற்ப உரலில் விரலி மஞ்சளை இடிக்கிறார்கள்.

சப்த கன்னிகளில் நடுவில் அமர்ந்துள்ள வாராகிக்கு, இடித்த மஞ்சள் தூளைக் கரைத்த நீரால் அபிஷேகம் செய்து அந்த தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டால், வேண்டுதல் நிறைவேறுகிறது என்பது பலருடைய அனுபவம். இந்த வேண்டுதலை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமை ராகு காலத்தில் செய்தால் பலன் விரைவில் கிடைக்கும்.

வலம் வரும்போது வள்ளி - தெய்வானையுடன் முருகன் காட்சி தருகிறார். முருகன் சந்நதியை அடுத்து வடமேற்கு மூலையில் வரதராஜ பெருமாள் தன் இரு தேவியருடன் காட்சி தருகிறார். அடுத்ததாக அகத்தியருக்கு தனிச் சந்நதி உள்ளது. அகத்தியர் திருநெடுங்களத்திற்கு வந்தபோது பஞ்சம் காரணமாக ஈசனுக்கு அபிஷேகத்திற்கு கூட தண்ணீர் இல்லாத நிலை உண்டாகியிருந்தது.

அப்போது அகத்தியர் தன் கட்டை விரலால் நிலத்தை அழுத்தினார். அந்த இடத்தில் இருந்து தண்ணீர் பீறிட்டு வெளியேறியது. இப்போதும், கோயிலுக்கு வெளியே சுந்தர தீர்த்தம் இருக்கிறது. ஆனாலும், கோயிலுக்குள் இருக்கும் அகத்தியர் தீர்த்தம் என்ற கிணற்றிலிருந்துதான் நீரெடுத்து ஈசனுக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.

காலபைரவர் கையில் ஒரு சர்ப்பம், காலைச்சுற்றியபடி மற்றொரு சர்ப்பமுமாகக் காட்சி தருகிறார். நாக தோஷம் உள்ளவர்கள் இந்த பைரவருக்கு அபிஷேகம் செய்து, தோஷம் நீங்கி எல்லா நலன்களும் பெறுகிறார்கள்.

வெளி பிரகாரத்தில் தென்புறம் அப்புலிங்கம், வாயு லிங்கம் கோப்பு லிங்கம் எனவும், இரு சண்டேசர்களும், அய்யனார், சப்தமாதர், விநாயகர், சப்த கன்னிகள், விநாயகர் நந்தி உள்ளனர். தென்மேற்கில் வலம்புரி விநாயகர் சிற்றாலயம், சுப்பிரமணியர்+2, பூமகள், திருமகள், உடன் திருமாலும், தனி சன்னதியில் உள்ளனர். ஜேஷ்டா, துர்க்கையும் உள்ளனர்.
கருவறை கோட்டத்தில், தென்முகன், அர்த்தநாரி, பிரமன், துர்க்கை உள்ளனர். கருவறை மண்டபத்தில் சூரியன் சந்திரன் உள்ளனர். சற்று எதிரில் அகத்திய லிங்கமும் அகத்தியர் தீர்த்த கிணறும் உள்ளன.

இங்குள்ள உலா திருமேனிகளில் வெண்கல குதிரை ஒன்றுள்ளது அதனை தூக்குவோர்க்கே தான் விரும்பும் பெண்ணை மணக்கும் பாக்கியம் கிட்டும் என்பது ஒரு செவி வழி செய்தியாகும். (பார்க்க இயலவில்லை)

வெளிச்சுற்றில் தாமரை மலர்களைத் தாங்கியபடி, அபய-வரத முத்திரைகளுடன் ஒப்பிலாநாயகி அருள் தரிசனம் நல்குகிறார்.

திருஞான சம்பந்தர் ‘இடர் களையும்’ பதிகத்தைப் பாடியது இத்தலத்தில்தான். திருஞான சம்பந்தர், தொண்டர்களுடன் இக்கோயிலுக்கு வர, தொண்டர்களுக்கு உடல் நிலை குன்றியது. உடல்நிலை சரியாகி கிளம்பும் போது இடி, மின்னல், மழை என்று வாட்டி எடுத்தது. அப்போது சம்பந்தர் பாடியதுதான் இடர் களையும் பதிகம். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் ‘இடர்களையாய் நெடுங்களம் மேயவனே’ என்று முடிகிறது. இக்கோயிலுக்கு வந்து ஈசனை வணங்கி, சம்பந்தர் பாடிய இடர்களையும் பதிகத்தின் 11 பாடல்களையும் பாடினால் தீராத வினைகள் தீர்ந்து விடும்.

கோயிலில் உள்ள கல்வெட்டுகள் மூலம் திருநெடுங்களநாதர், நெடுங்களம் உடையார், திருநெடுங்களத்து மகாதேவர், திருநெடுங்களமுடைய நாயனார், திருநெடுங்களத்து ஆழ்வார், களந்தை நாயகர், கைலாயத்த மகாதேவன், சுந்தரமூர்த்தி ஆகிய பெயர்களில் அழைக்கப்பட்டதாக அறியப்படுகிறது.

அத்துடன் மதுரை கொண்ட பரகேசரிவர்மன், முதலாம் ராஜராஜன் மற்றும் மூன்றாம் குலோத்துங்கன் முதலான பல அரசர்கள் இக்கோயிலுக்காக பல தொண்டுகளை செய்திருப்பதும் தெரிகிறது.

திருநெடுங்களநாதரை தரிசித்தாலே போதும் இடர்கள் நீங்கும் என்பதில் ஐயமுண்டோ?

location:On Trichy -Tajore Highway (NH 45) just 4 Kms from Thuvukudi & 6 KM from BHEL.

Bus Service; Busses available from Chatram Bus stand from early morning 4 AM to late ight 11.30 PM at a frequency rate of max 1 Hr in peak hours...

Nearest Railway station; Thiruverumbur Railway station in Trichy- Tajore BG line

Airport; Trichy Airport
Nearby cities:
Coordinates:   10°46'15"N   78°51'10"E
This article was last modified 7 years ago