ஸ்ரீமுக்தபுரீஸ்வரர் ஆலயம், திருப்பயற்றூர், திருப்பயத்தங்குடி

India / Tamil Nadu / Kilvelur /
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

SCN078 - ஸ்ரீகாவியங்கண்ணி சமேத ஸ்ரீபயற்றுநாதர் திருக்கோவில்,திருப்பயற்றூர் சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 78வது தலம்.PT Eyesight - கண்நோய்கள் தீர்க்கும் தலம், இங்குள்ள கருணா தீர்த்தத்தில் மூழ்கி ஸ்ரீநேத்ராம்பிகையை வழிபட்டால் கண்நோய் நீங்கும் என்றொரு செய்தி சாசனத்தின் மூலம் தெரிய வருகிறது.இன்று மக்களால் 'திருப்பயத்தங்குடி' என்று வழங்கப்படுகிறது.சுங்கம் கொடுக்க அஞ்சிய வணிகன் ஒருவன், சுங்கமில்லாத பயறு மூட்டைகளாகத் தன் மிளகுப் பொதிகளை மாற்றித் தருமாறு பேண்ட, அவனுக்கு இறைவன் பயறு பயறு மூட்டைகளாக மாற்றி மீண்டும் மிளகு மூட்டைகளாகவே மாற்றித் தந்து அருளியதால், அவ்வணிகன் கிடைத்த செல்வத்தில் திருப்பணி செய்ய, திருப்பயற்றுநாதர் என்று பெயர் பெற்றார் என்பது செவி வழிச் செய்தி.மூலவர் - ஆவுடையார் நாற்கோண வடிவம்; பழமையான திருமேனி.
அபூர்வமான சிலந்தி மரம் இத்தலத்தின் தலமரம்.
shaivam.org/siddhanta/sp/spt_p_payarrur.htm
temple.dinamalar.com/New.php?id=233
Location:திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் பேருந்துச் சாலையில் கங்களாஞ்சேரியை அடைந்து, அதையடுத்து வலப்பக்கமாகப் பிரிந்து செல்லும் நாகூர் சாலையில் சென்று, மேலப்பூதனூர் அடைந்து அங்கிருந்து பிரியும் திருமருகல் சாலையில் சென்றால் இத்தலத்தை அடையலாம்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°49'51"N   79°42'11"E
  •  172 கி.மீ
  •  176 கி.மீ
  •  241 கி.மீ
  •  294 கி.மீ
  •  396 கி.மீ
  •  429 கி.மீ
  •  442 கி.மீ
  •  452 கி.மீ
  •  468 கி.மீ
  •  540 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 7 years ago