அருள் மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் நாச்சியர்கோயில் Mangala saneeswaran Temple

India / Tamil Nadu / Tiruvidaimarudur / SH 65 kumbakonam --kodavasal
 temple, Shiva temple

திருவாரூர் சாலையில் உள்ளது நாச்சியார்கோயில் இங்கு வைணவ கோயில் தான் பிரசித்தம் என்றாலும் இங்குள்ள ராமநாத சாமி கோயிலில் இருக்கும் சனைசரனும் சிறப்பு கொண்டவர்.
ஊருக்குள் நுழையும் இடத்திலேயே உள்ளது ராமநாதசுவாமி எனும் திருக்கோயில். ராவணனை வெற்றிகொண்டு திரும்பும் பொது இத்தல இறைவனை வழிபட்டதால் ராமநாதர் என்பெயர் பெற்றார்.

இங்கு மேற்க்கு முகமாய் நின்று அருள் பாலிக்கும் சனைச்சரன், தனது இரு மனைவிகளான மந்தா,ஜெஷ்ட்டா ஆகிய இருவருடனும், மகன்கள் மாந்தி, குளிகன் ஆகியோருடன் உள்ளார். தசரதர் வணங்கிய நிலையிலும் உள்ளார்.

இவருக்கு என தனி கொடிமரம் பீடம் சன்னதி, வாயிற்காவலர் உள்ளன.

சனி ரோகிணியில் 12வருடங்கள் வாசம் செய்தால் ரோகினி சகட பேதம் உண்டாகும் அதனை நீக்க இங்கு வழிபட்டால் குறை தீரும். ரோகிணி நட்ச்சத்திர அன்பர்கள் வழிபடவேண்டிய தலம்.

இங்கு சூரியன் ஆவணி 25,26,27ஆகிய நாட்களில் இராமநாதரை வணங்கும் காட்சி அற்ப்புதம். அதேபோல் சித்திரை முழுநிலவு நாளில் இறைவனை சந்திரன் வழிபடுகிறார்.

இறைவன்- ராமநாதர்
இறைவி- பர்வதவர்த்தினி
Nearby cities:
Coordinates:   10°55'5"N   79°26'33"E

Comments

  • here ayOthya king dhasarathaa get cured from sanee's curse,, and sung famous saneeswara sthothra 'kONastha pingalO babroo..' many of us may miss this important temple,, and sreesaneeswarar got separate kodimaram here in this sreesivan temple.
This article was last modified 8 years ago