sree akashapureeswarar temple, , kaduveLi, thiruvaiyAru, (Kaduveli)

India / Tamil Nadu / Thiruvaivaru / Kaduveli
 temple, Shiva temple

AvrT -Sree Agasapureeswarar temple kaduveli is avathara thalam of sree kaduveli sidha. Lord is here blessing along with sree mangaLAmbikai .BStarT- Birth star temple, the temple to worship who born in pooraAdam star.
Shri Agasapuriswarar Udanurai Mangalambikai Temple
----------------------------------
நந்தவனத்திலோர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்த
கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி
--------KADUVELI SIDDHAR-----------

அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்

தல வரலாறு:
கடுவெளிச்சித்தரின் அவதாரத்தலம் இது. கடுவெளி என்றால் பரந்தவெளி. இந்த
சித்தர், தான் கண்டுணர்ந்த ஞானத்தை மக்களுக்கு உபதேசித்தார். இவர்
சிவதரிசனம் வேண்டி தவமிருந்தார். அவருக்காக, இத்தலத்தில் எழுந்தருளிய
சிவன், சித்துக்களில் வல்லமை பெறும்படி அருள் செய்தார். பிற்காலத்தில்
இப்பகுதியை ஆண்ட சோழமன்னன் ஒருவன், சித்தருக்கு அருளிய சிவனுக்கு கோயில்
எழுப்பினான். இவர் பஞ்சபூதங்களில் ஆகாயத்திற்கு அதிபதியாக திகழ்வதால்
ஆகாசபுரீஸ்வரர் என்று பெயர் பெற்றார். இந்த தலத்துக்கு சித்தரின் பெயரையே
வைத்தான்.
பூராடம் நட்சத்திர தலம்: சுவாமி ஆகாசபுரீஸ்வரர்
பூராடம் நட்சத்திரத்திற்கு அதிபதியாக அருளுகிறார். மங்களகரமான வாழ்க்கை
தருபவள் என்பதால், அம்பிகைக்கு மங்களாம்பிகை என்று பெயர். ஆகாயவெளியில்
உள்ள அனைத்து தேவதைகளும், வாஸ்து பகவானும், பூராட நட்சத்திரநாளில்
ஆகாசபுரீஸ்வரரை வழிபாடு செய்வதாக ஐதீகம். எனவே, இந்த நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள், தங்களது நட்சத்திர நாளில் இத்தல சிவனுக்கு புனுகு, ஜவ்வாது
சாத்தி, கேசரி நைவேத்யம் செய்து வணங்கி வரலாம். திருமணத்தடை உள்ளவர்கள்,
தங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சுவாமி சன்னதியில் சாம்பிராணி புகையிட்டு
வழிபடுகின்றனர்.
சித்தர் வழிபாடு: முதலில் இக்கோயிலில்
கடுவெளிச்சித்தரின் சிலை வடிவம் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்,
இக்கோயிலைத் திருப்பணி செய்தபோது, சித்தரின் சிலை கிடைக்கப்பெற்றது. இவர்
கோயில் முன் மண்டபத்தில் இருக்கிறார். சித்தருக்கு சிவன் காட்சி தந்தபோது,
அவருக்காக நந்திதேவர் வெளியே நின்று கொண்டார். இதனடிப்படையில் நந்தி,
கோபுரத்திற்கு வெளியே உள்ளது. சித்தர்
வழிபாட்டில் ஈடுபாடு உள்ளோர் வழிபட வேண்டிய தலம் இது.
பூராடம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: சுக
போகங்களை அனுபவிப்பதில் விருப்பம் கொள்வர். நண்பர்கள், உறவினர்கள்
மத்தியில் செல்வாக்கோடு வாழ்வர். பிடிவாத குணத்தோடு மிக கடுமையாகப் பேசும்
சுபாவம் இருக்கும். வாக்குவாதங்களில் அடிக்கடி ஈடுபடுவர்.
இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து (13 கி.மீ.,)
திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கி.மீ., தூரம்
சென்றால் கடுவெளியை அடையலாம். பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.
திறக்கும் நேரம்: காலை 9 - 10 மணி, மாலை 5 - 6 மணி. பூராடம் நாட்களில் காலை 8 - 1 மணி வரை.
போன்: +91 - 94434 47826, 96267 65472.
Nearby cities:
Coordinates:   10°52'48"N   79°4'1"E

Comments

  • iam pooradam star. im planed to go there as early as posible, opening time of the temple is too short. so take steps to open morning 3 hours and evening 3 hours at least. thank you very much to give a space for my opinion.
  • r, You have mentioned that the temple is located near "kallanai". But in a private TV (SUN TV Kalai vanakkam programme) it was mentioned that it is near Tiruthuraipoondi, in Tiruvarur Distrisct. Please clarify.
  • Take bus from Thanjavur number 23 and 15 and 5. Ask for kaduveli bus stop. From bus stop it will be 100 meters. If you are coming from kallanai then you take bus number 23 or govt bus to kumbakonam or thiruvaiyaru.
This article was last modified 7 months ago