sree kailAsanAthar temple, pandAravAdai (Vazhuvur)

India / Tamil Nadu / Mayiladuthurai / Vazhuvur
 temple, Shiva temple

MdKT - one of the 72 mAdak kovil temples built by king sree kOtchengat chOzhan.sreesoundharya nayaki sametha sree kayilasa nathar temple, pandaaravaadai.
Contact: 75981 15494/ 94427 42930
மயிலாடுதுறை- திருவாரூர் சாலையில் உள்ள வழுவூரின் தெற்கில் உள்ளது பண்டாரவாடை எனும் சிற்றூர்
சிவபெருமானின் அட்ட வீரட்டான திருத் தலங்களில் (பிரம்மனின் சிரம் கொய்தது, யானைத் தோல் போர்த்தியது உள்ளிட்ட சிவனாரின் வீரச் செயல்கள் நிகழ்ந்த எட்டுத் தலங்களை, அட்ட வீரட்டான தலங்கள் என்பர்) வழுவூர் ஒன்று. மயிலாடுதுறைக்கு அருகே உள்ளது. யானையின் வாய் வழியாக அதன் உடலுக்குள் புகுந்து, அதைப் பிளந்து கொண்டு வெளியே வந்தார் சிவபெருமான். பிறகு, யானையின் தோலை உரித்து, அதைத் தன் மேல் போர்த்திக் கொண்டு காட்சி தந்தார். இது, வழுவூர் தல புராணம்.
வழுவூருக்குத் தென்கிழக்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில் பண்டாரவாடை என்கிற சிறு கிராமம் அமைந்துள்ளது. இதன் புராண காலத்துப் பெயர் பர்வதபுரம். வழுவூரில் நிகழ்ந்த வீரட்டான சம்பவத்துடன் தொடர்புடைய தலமாக பண்டாரவாடை இருப்பது குறிப்பிடத் தக்கது. 'சுதபுரமகாத்மியம்' எனப்படும் வழுவூர் வீரட்டம் பற்றிய வடமொழி புராண நூலின் 17-வது அத்தியாயத்தில், பண்டாரவாடை திருத் தலம் பற்றி குறிக்கப்பெற்றுள்ளது.
பண்டாரம் என்ற சொல்லுக்குப் பல பொருள் உண்டு. பொதுவாக, சிவபெருமானைக் குறிக்க வும், துறவிகளைக் குறிக்கவும் பொருள் வைத்திருக்கும் அறைக்கும் இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது.
இங்குள்ள இறைவன் திருநாமம் ஸ்ரீகயிலாசநாதர். அதற்கேற்றாற் போல் ஒரு சிறிய கட்டுமலை மேல் தரிசனம் தருகிறார். இந்த ஸ்ரீகயிலாசநாதரை தரிசித்தால், திருமாலைத் தரிசித்த பலனும் சேர்ந்து கொள்கிறது. எப்படி?
கஜ (யானை) சம்ஹாரம் முடிந்து தாருகாவனத்தில் இருந்து வழுவூருக்கு இறைவனார் திரும்பும்போது, பண்டாரவாடையின் வழியாக பயணம் அமைந்தது. அப்போது, சிவனின் அம்சமாக லிங்க பாணமும், கஜ சம்ஹார நிகழ்ச்சிக்கு மோகினி வடிவில் இறைவனாருடன் துணை வந்த விஷ்ணுவின் அம்சமாக ஆவுடையாரும் இணைந்து இங்கே கயிலாசநாதராக அமர்ந்தார் என கூறப்படுகிறது எனவேதான், இந்த கயிலாசநாதரை தரிசித்தால், சிவனையும் விஷ்ணுவையும் சேர்ந்து தரிசித்த பலன் கிடைக்கிறது. மிகவும் புராதனமான கோயில் இது.
சுற்று மதில் சுவற்றுடன் கூடிய கோயில் உள்ளே நுழைந்தவுடன் பிரமிப்பூட்டும் விதமாய் உயர்ந்த கட்டுமலைமேல் அமைத்னுள்ளது இறைவனின் கருவறை.
இந்தக் கோயிலில் ஸ்ரீகயிலாசநாதர் குடி கொண்டிருக்கும் கருவறை அமைப்பை, 'மாடக்கோயில்' என்பர். அதாவது இறைவனின் சந்நிதி தரைத் தளத்தோடு இல்லாமல், சற்று உயரே- சுமார் பத்தடி உயரத்தில் அமைந்திருக்கும். படிகள் ஏறிப் போய்த்தான் மூலவரான ஈசனைத் தரிசிக்க முடியும். அதே போல் சில படிகள் ஏறிப் போய்த்தான் பண்டார வாடை ஸ்ரீகயிலாசநாதரைத் தரிசிக்கிறோம்.
கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் இந்த ஆலயத்தைக் கட்டிய பெருமைக்கு உரியவன்- கோச்செங்கட்சோழன். இதே போன்ற மாடக்கோயில் அமைப்பில் மொத்தம் 70 கோயில்களை ஈசனுக்காக இந்த மன்னன் கட்டி னானாம். பர்வதத்தின் (மலையின்) மேல் காட்சி தரும் இறைவன் என்பதால், பண்டார வாடையை பர்வதபுரம் என்றும், இந்த ஈஸ்வரனை பர்வதலிங்கம் என்றும் சொல்வதுண்டு. கட்டு மலையின் மேல் (கட்டி வைக்கப்பட்ட செயற்கையான மலை) கயிலாச நாதரைத் தரிசிப்பது, கயிலாய மலைக்கே சென்று தரிசிப்பது போன்ற இறை அனுபவத்தைத் தரும் என்கின்றனர், இங்குள்ள அடியார்கள். தரை மட்டத்தில் இருந்து சுமார் பத்தடி உயரத்தில் இறைவன் திருச்சந்நிதி.

ஸ்ரீகயிலாசநாதரின் கருவறைக்கு அர்த்த மண்டபம், மகா மண்டபம் மற்றும் நந்திதேவரும் துவாரபாலகர்களும் உண்டு. பெரிய லிங்கத் திருமேனி. உயரமான பாணம். கயிலாயநாதரைத் தரிசிக்கும்போது உடலும் உள்ளமும் இளகுகிறது.. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, பிரம்மா, லிங்கோத்பவர், விஷ்ணு துர்கை ஆகியன உள்ளன.
கட்டுமலையின் கீழே அம்பாள்- ஸ்ரீசௌந்தரநாயகி, தெற்கு நோக்கி, நின்ற கோலத்தில் அருள் பாலிக் கிறாள். அட்சமாலை, தாமரை தாங்கிய கோலத்தில், நான்கு திருக்கரங்கள். அகிலம் காக்கும் அன்னையை வணங்குகிறோம். ஸ்ரீகயிலாசநாதரையும், சௌந்தர நாயகியையும் வழிபட்டால், புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்தப் பேறு கிடைக்கும்; திரு மணத் தடை உள்ளவர்களுக்கு, விரைவில் திருமணம் கைகூடும் என்கிறார் ஆலய அர்ச்சகர்.
ஆலயத்தில் பல சன்னதிகள் உள்ளன. விஷ்ணுவோடு இந்த ஆலயம் சம்பந்தப்பட்டிருப்பதால் பிராகார வலத்தில் முதலில் வடக்கு நோக்கி ஞானந்தகிரி சுவாமிகள் தனி சிற்றாலயத்திலும், ஸ்ரீதேவி- பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாளுக்கும் தனி சன்னதியில் கிழக்கு நோக்கி உள்ளார். . இந்தப் பெருமாளுக்கு பலிபீடம், கருடாழ்வார் உண்டு. அடுத்து கன்னிமூல கணபதி, வள்ளி- தெய்வானை சமேத சுப்ரமண்யர், சகஸ்ர லிங்கம், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர் ஆகிய சன்னதிகளும், சனைச்சரன், கால பைரவர், விஷ்ணு துர்கை -கோஷ்டத்தில் இருப்பது தவிர இன்னொரு வடிவம், சூரியன், சந்திரன், நாகர், தேவியர்களுடன் நவக்கிரகங்கள்,
தல விருட்சமான வெள்ளெருக்கு உள்ளது. எதிரே அமைந்துள்ள திருக்குளத்தை, அனந்த தீர்த்தம் என்றும், கிருதாபஹர தீர்த்தம் என்றும் அழைக் கின்றனர். புனிதம் நிறைந்த இந்தத் தீர்த்தத்தில் நீராடினால் தோல் வியாதிகளும், உயிர்க்கொல்லி நோய்களும் குணமாகும் என்பது ஐதீகம்.
இறைவன்- கைலாசநாதேஸ்வரர்
இறைவி- சௌந்தரநாயகி
Nearby cities:
Coordinates:   11°2'25"N   79°38'30"E
This article was last modified 6 months ago