sree swarnathabanEswarar temple, chithAimur , chitrEmam,

India / Tamil Nadu / Thiruthuraipundi / Adlathampadi road
 temple, Shiva temple, thevara paadal petra sthalam

SCN106 - sree pon vaitha nAthar along with sree akilAndEswari temple, thiruchitrEmam is 106th thEvAra temple of chOzha dhEsh(nAdu) located in south shore of the river cauvEri.chithAimoor is the name of the village.PT Wealth - parikAra, means curing, temple to worship for those who wants to become rich.PT marriage- parikAra temple for the harmonization of married couples. MuVT - moolavar vishEsha temple, the linga moortham has got the sword mark.KyWT - kaliyuga wondrous temple, since still we can see a very big beehive inside the temple, were the rishis are worshiping sree swarana thapanEswarar in the form of bees.
temple.dinamalar.com/en/new_en.php?id=219
Location: chithaaimur can reach from AlathambAdi which is in the thiruvAroor-thiruthuraipoondi road.
இறைவர் - பொன்வைத்த நாதர்

சிற்றேமமுடையமகாதேவர்.

இறைவி- மானார்விழிநன்மாது.

அகிலாண்டேஸ்வரி

இப்பெயர் இவ்வூர்ப்பதிகத்தில் ``திருவாருஞ்சிற்றேமத்தான் `மானார்விழி நன்மாதொடும்` மகிழ்ந்தமைந்தனல்லானே`` எனக் குறிப்பிடப் பெற்றுள்ளது.

வழக்கில் மக்கள் 'சித்தாய்மூர் ' என்று அழைக்கின்றனர்.

திருச்சிற்றேமத்திற்கு வடபாலுள்ள முத்தரசபுரத்தை ஆண்டு வந்த மன்னனுக்கு நாடொறும் இவ்வூர் வழியாகப் பாற்குடம் செல்வது வழக்கம். சில நாள்களில் அப்பாற்குடம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் விழுந்து உடையலாயிற்று. அரசன் அவ்விடத்தை வெட்டிப் பார்க்க, சிவலிங்கத் திருமேனியைக் கண்டான். அவ்விடத்துக் கோயில் எழுப்பினான் என்பது வரலாறு. இதன் அடையாளமாக சிவலிங்கத்தின் மீது வெட்டுக்காயம் உள்ளது.

இவ்வூரி வாழ்ந்த சங்கரன் செட்டியார், மனைவி கருவுற்ற மிக்க அண்மைக் காலத்தே பொருளீட்டும் முயற்சி மேற்கொண்டு வெளியூர் சென்றார். சிவப்பற்று கொண்டு, சிவத் தொண்டு செய்து வாழ்ந்து வந்த அம்மங்கைக்கு இறைவன் நாடொறும் ஒரு பொன் காசு வைத்து உதவ, அவள் அதை விற்று வாழவு நடத்தி வந்தாள். மகப்பேறு காலம் நெருங்கியது; இறைவனை நோக்கி அழுது வேண்ட, அகிலாண்டேஸ்வரியே தாயாக வந்து உதவி, மகவினைப் பெற்றெடுத்தாள்.

செட்டியார் ஊர் திரும்பினார்; சிலர் அம்மாதின் மேல் பொய் ஒழுக்கக் குற்றச் சாட்டுக்களைச் செட்டியாரிடம் கூறினர். அம்மங்கை இறைவனிடம் சென்று பல்லோர் முன்னிலையிலும் வேண்டி, தன் கற்பை வெளிப்படுத்துமாறு கலங்கி வேண்ட, இறைவன் - கோயிற் கதவைத் தானே திறக்கச் செய்தும், பின்புறம் இருந்த ஆத்திமரத்தை இடம் பெயர்ந்து முன்புறம் வரச்செய்தும், நந்திதேவரைப் பலிபீடத்தின் பின் போகச் செய்தும் - பல அற்புதங்களை நிகழ்த்தி அப்பெண்ணின் கற்புத்திறத்தை ஊரறியச் செய்தார்

இவ்வூரின் மேற்கே 6 கி. மீ. தொலைவிலுள்ள இடம் - செட்டிப் பெண்ணிற்கு இறைவன் அன்றாடம் பொன் நிறுத்துத்தந்த இடமாகும்; தற்போது, [பொன் + நிறை] - 'பொன்னிறை' என்னும் பெயருடையது.

இக்கோயிலில் உள்ள தேன் கூடு வியப்பானது - நாடொறும் அர்த்த சாமத்தில் வழிபட்டு வந்த பிரமரிஷி ஒருநாள் காலம் தாழ்ந்து வர, ஆலயக்கதவு காப்பிடப்பட்டுவிட்டது. அப்போது அவர் தேனி உருக்கொண்டு உள்ளே சென்று பெருமானை வழிபட்டு அங்கேயே வசிக்கத் தொடங்கினார் என்பர். இப்போதும் சன்னலில் தேன்கூடு உள்ளது.

கல்வெட்டு:

இவ்வூர்க் கோயிலில் சோழ மன்னர்களில் மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மன், இராஜகேசரிவர்மன், இராஜேந்திர சோழ தேவன், திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜ தேவன், திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜேந்திர சோழதேவன் இவர்கள் காலங்களிலும்; பாண்டியர்களில் வரகுண மகாராசன், வல்லப தேவனாகிய தெய்வ வீர பாண்டியன், மாறவர்மனாகிய திரிபுவனச் சக்கரவர்த்தி சுந்தரபாண்டிய தேவன் இவர்கள் காலங்களிலும்; விசயநகர வேந்தர்களில் வேங்கட பதி ராயர் காலத்திலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக் கின்றன.

இக்கோயிலில் உள்ள மதுரைகொண்ட கோப்பரகேரி வர்மர், வரகுணமகாராசர், முதலானோர் கல்வெட்டுக்களில் இவ்வூரின் பெயர் திருச்சிற்றேமம் என்றும், சகம் 1381 அதாவது கி. பி. 1459 இல் ஏற்பட்ட கல்வெட்டில் இவ்வூரின் பெயர் திருச்சிற்றம்பலம் என்றும்; இறைவரின் திருப்பெயர் திருச்சிற்றேமத்து மகாதேவர், திருச்சிற்றேம முடையார், பழையவனத் தம்பிரானார், பழையவனப்பெருமாள் எனவும் கூறப்பெற்றுள்ளது.

உள்ளே நுழைந்ததும் பெரிய ஆத்தி மரமும் ஆத்தி மர விநாயகரும் உள்ளனர். அடுத்து நந்தி , பலிபீடம் என உள்ளதை காணலாம். இறைவன் கிழக்கு நோக்கியும் அம்பிகை தெற்கு நோக்கியும் உள்ளனர். கருவறை அர்த்த மண்டப சன்னலில் தேன்கூடு உள்ளது.

பிரகாரத்தில் விநாயகர், அடுத்து மகாலட்சுமி, அடுத்து முருகர் என உள்ளனர். கோமுகத்தின் அருகில் ஒரு லிங்கமும் சண்டேசர் சன்னதியில் சிறிய மகாலட்சுமி சிலையும் உள்ளது.

வடகிழக்கு மண்டபத்தில் எண்கர பைரவர், பிரம்மரிஷி, சனைச்சரன், ஐயனார், மாணிக்கவாசகர், குமரன் சூரியன் சிலைகள் உள்ளன.ALSO CALLED AS AKILANDESWARI TEMPLE...!
Nearby cities:
Coordinates:   10°36'24"N   79°41'42"E
This article was last modified 4 years ago