sree thArukAvanEswarar temple, thiruparAithurai (Tirupparaitturai)

India / Tamil Nadu / Musiri / Tirupparaitturai / National Highway No. 67 (Coimbatore-Nagappattinam)
 Shiva temple, thevara paadal petra sthalam

SCN003 - thiru paraaithurai 3rd thEvAra Temple of ChOzha dhEsh(Naadu) is located in South shore of river Cauveri.sre thaarukaavanaeswarar along with sree hEmavarnAmbAL temple, thirupparAithurai.
SrPT - Soorya pooja to the lord on 18th of prashtopathi(purattAsi) month. TPuT - Thirupugazh temple.

temple.dinamalar.com/en/new_en.php?id=117
Locaiton: 15kms from thiruchi on the route to kulithalai.

பராய் மரக்காட்டில் இறைவன் எழுந்தருளி இருப்பதால் இத்தலம் "பராய்த்துறை" எனப்படுகிறது. இத்தலத்திற்கு "தாருகாவனம்" என்றும் பெயரும் உண்டு (பராய் மரம், சமஸ்கிருதத்தில் "தாருகா விருக்ஷம்" எனப்படுகிறது). இந்த பராய் மரத்திற்கு எளிதில் குணப்படுத்த முடியாத சிலவகை தோல் வியாதிகளை குணப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக நம்பப்படுகிறது.
பராய் என்பது முருடுகள் உள்ள ஒருவகை மரம்; "வன்பராய் முருடொக்கு மென்சிந்தை" (திருவாசகம்). பராய் இங்குத் தலமரமாதலின் இப்பெயர் பெற்ற தென்பர்; பரக்குநீர்ப் பொன்னி மன்னு பராய்த்துறை" என்றது திருக்குறுந் தொகை.இத்தலம் சோழ மன்னர்கள் ஆண்ட ஏழாம் நூற்றாண்டை சேர்ந்தது. முன்னொரு காலத்தில் இத்தலத்தில் தாருகாவன முனிவர்கள் கற்பில் சிறந்து விளங்கி பல வரங்களையும் பல சக்திகளையும் பெற்று வாழ்ந்து வந்தனர். ஆனால் அவர்கள் தாம் பெற்ற அனைத்து சக்திகளுமே தாம் செய்த வேள்விகள், யாகங்கள் மற்றும் தவத்தினால் தான் என்ற அகந்தை கொண்டு இருந்தனர்.
இதனால் தம்மையே கடவுளுக்கு இணையாக எண்ணி, ஆலயங்களை மதிக்காமல் தாம் உள்ள இடங்களே ஆலயங்கள் எனக் கருதி வாழத் துவங்கினர், அதைக் கண்ட மற்ற ரிஷி முனிவர்கள் சிவ பெருமானிடம் முறையிட்டனர்.எனவே தாருகாவன முனிவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க நினைத்த சிவ பெருமான் விஷ்ணுவை அழைத்து, தாருகாவன முனிவர்கள் முன்னால் மோகினியாகச் சென்று அவர்களின் கற்பை கலைக்குமாறுக் கூறினார். விஷ்ணுவும் மோகினி உருவில் சென்று முனிவர்களை மயக்கி அவர்களின் தவத்தைக் கலைத்து அவர்களது சுயக் கட்டுப்பாட்டை இழக்க வைத்தார்.
அதே நேரத்தில் சிவபெருமானும் தன்னை ஒரு அழகான ஆண் மகனைப் போல மாற்றிக் கொண்டு முனிவர்களின் மனைவிகளிடம் சென்று பேச்சுக் கொடுத்து தன் அழகில் அவர்களை மயங்க வைத்து அவர்களின் கற்பையும் கலைத்தார். சிவபெருமானின் நாடகத்தை அறிந்து கொண்ட தாருகாவன முனிவர்கள் தாம் சிவ பெருமானைவிட அதிக சக்தி பெற்றவர்கள் என்பதை காட்ட ஒரு வேள்வியை துவக்கினர்.அந்த வேள்வியில் எரிந்த ஹோம குண்டத்தில் இருந்து சில புலிகளையும், மானையும், பாம்புகளையும் படைத்து அவற்றை சிவபெருமானை கொன்றுவிட்டு வருமாறு அனுப்பினார்கள் தாருகாவன முனிவர்கள். சிவபெருமானோ அந்த புலிகள் அனைத்தையும் கொன்று அவற்றின் தோலை தமக்கு ஆடையாகவும், மானை தனது இடது கரத்தில் பிடித்து வைத்துக் கொண்டும், பாம்புகள் வந்த போது அவற்றைக் கொன்று தனக்கு மாலையாக அணிவித்துக் கொண்டார்.
உடனே தாருகாவன முனிவர்கள் பல பூதகணங்களை ஏவ, அனைத்தையும் நொடிப் பொழுதில் சிவபெருமான் துவம்சமாக்க முனிவர்கள் பயந்து போயினர். தாம் கடவுளுக்கு இணையானவர்கள் அல்ல, கடவுளுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து கொண்டு சிவபெருமானிடம் தமது இறுமாப்புக்கு மன்னிப்புக் கேட்டனர்.சிவபெருமானும் முனிவர்களை மன்னித்து காட்சி தந்து அருளினார். அந்த இடத்திலயே பின்னர் ஆலயமும் எழுந்தது.
இறைவன் சுயம்பு லிங்கமாக, தாருகாவனேஸ்வரர், பராய்த்துறை நாதர் என்ற திருநாமங்களுடன் கிழக்கு முகமாகவும்,பசும்பொன் மயிலாம்பிகை, ஹேமவர்ணாம்பிகை என்ற திருநாமம் பெற்ற இறைவி தெற்கு நோக்கி தனி கோயிலில் எழுந்தருளியுள்ளனர்.
முகப்பு வாயிலுடன் கூடிய கோயில் வளாகம்.. கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் இருக்கும் நூறுகால் மண்டபத்தில் தான் தற்போது விவேகானந்தர் தொடக்கப்பள்ளி நடைபெறுகிறது. நூறுகால் மண்டபத்திற்கு எதிரே குளம் இருக்கிறது.ஏழு நிலைகள் கொண்ட ராஜகோபுரத்தின் உள்ளே நுழையும் முன் விநாயகரை தரிசித்து உள்ளே சென்றால் நந்தி மண்டபம். பலிபீடம், செப்புக் கவசமிட்ட கொடிமரம் உள்ளது. அதற்க்கு முன் பெரிய பலிபீடம் உள்ளது.நந்தி இருக்கும் இந்த நந்தி மண்டபத் தூண்களில் தலத்தினைப் பாடிய சம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் மற்றும் கோயில் திருப்பணி செய்த வீரராகவ செட்டியார் உருவச் சிலைகள் காணலாம்.
ராஜகோபுரத்தினை ஒட்டிய சுவற்றில் “இங்கே நின்றால் ஐந்து கோபுரங்களைப் பார்க்கலாம்” என எழுதி இருக்கிறார்கள். அந்த இடத்தில் நின்று பார்த்தால் ராஜகோபுரத்தினையும் சேர்த்து ஐந்து கோபுரங்களைக் காண முடியும்.
மூலவர் தவிர, உட்பிராகரத்தில் வலம்புரி விநாயகர், சப்தகன்னியர், அறுபத்தி மூவர், நால்வர், சோழலிங்கம், கங்காள மூர்த்தி சோமாஸ்கந்தர், மகாகணபதி, பஞ்சபூத லிங்கங்கள், ஆறுமுகர், பிக்ஷாடனார், பிரம்மா, துர்க்கை, கஜலக்ஷ்மி, தக்ஷிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், நவகிரகங்கள் பைரவர், சூரியன் , ஆகியோரும் , இரண்டாம் பிரகாரத்தில் கன்னிமூலகணபதி, தண்டாயுதபாணி மற்றும் பெரிய பராய் மரமும் அதனடியில் ஓர் லிங்கமும் வில்வமரத்தடியில் ஓர் லிங்கமுமாக அருள்பாலிக்கின்றார்கள்.
மூலவர் மண்டபத்தின் முதல் தூணில் இடது புறம் காளியின் ஆடலும் எதிர் தூணில் இறைவனின் ஊர்துர்வ நடனமும் புடைப்பு சிற்ப்பமாக உள்ளன.ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் முதல் நாளில் இத்திருத்தலத்தில் காவிரியில் புனித ஸ்நானம் செய்வார்கள். ஐப்பசி மாதத்தில் முதல் நாளில் இங்கே முதல் முழுக்கு செய்து கடைசி நாளன்று மயிலாடுதுறை காவிரியில் கடை முழுக்கு செய்வது விசேஷம் ஆகும்.
கல்வெட்டில் இத்தலம், "உத்தம சீவிச் சதுர்வேதிமங்கலத்துத் திருப்பராய்த்துறை" என்றும் இறைவன் பெயர் "பராய்த்துறை மகாதேவர் " என்றும் "பராய்த்துறைப் பரமேஸ்வரன்" என்றும் குறிக்கப்படுகிறது.திருச்சி- குளித்தலை சாலையில் 15கிமி தூரத்தில் உள்ளது.
Nearby cities:
Coordinates:   10°53'3"N   78°33'50"E
This article was last modified 7 years ago