Sree Vakeeswarar Temple, Perunjeri, Peruncheri

India / Tamil Nadu / Mayiladuthurai / kiliyanur road
 temple, Shiva temple

PT Education/Knowledge - temple to worship for getting good knowledge and good education, sree vAkdhEvi(swaraswathi) and lord sree guru worshipped here.BrST - bairavar special temple, four yugabairava murthis are here.TrVT - theertha vishEsha temple,temples known for the specialty of their holy water ponds( theertham),cures all kind of skin diseases.NvPT Guru - navagraga parikAra temple means curing temple for those who has guru dhOsham in jAthakA.PDMT - one of the pancha dhakshinamruthy temple, around mayiladuthurai.PT Deaf/Dump - parikara temple means cure the deaf and dump problems, since worshiped by sree saraswathi.
Contact:Sambasivachariyar 9443392176 - Timings: 8.00-12.00am/ 4.00-8.00pm
நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், பெருஞ்சேரி சிவன்கோயில்
மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் எட்டு கிமி தூரத்தில் பெருஞ்சேரி உள்ளது இவ்வூரில் இரு சிவாலயங்கள் உள்ளன. மேலும் ரிஷி கோயில் எனும் பெயரில் ஒரு புத்தர் கோயிலும் உள்ளது.48,000 மகரிஷிகள் தவம்செய்து பேறுபெற்ற தாருகாவனம் என்னும் தலம் தான் இன்றைய பெருஞ்சேரி.ரிஷிகள் எல்லாம் தவம் செய்வதற்கு ஒரு நல்ல இடத்தைத் தேர்வு செய்ய பிரம்மாவை அணுகினர். பிரம்மா தர்ப்பையினால் ஒரு வளையம் செய்து, ""இது பூமியில் எங்கு போய் விழுகின்றதோ அவ்விடத்தில் தவம் செய்யலாம்'' என்றுரைத்தார். அந்த தர்ப்பை வளையமானது தாருகாவனத்தில் விழுந்தது. அதன்படி இவ்விடத்தில் தவம் செய்தனர்.
"கரும்பினும் இனியான் தன்னைக் காய்கதிர் சோதியானை
இருங்கடல் அமுதம் தன்னை இறப்பொடு பிறப்பிலானை
பெரும் பொருள் கிளவியானை பெருந்தவமுனிவர் ஏத்தும்
அரும்பொனை நினைந்த நெஞ்சம் அழகிதாம் நினைந்தவாறே'
என்கிறார் அப்பர் சுவாமிகள்.
மக்கள் கூட்டம் அதிகமாக வசிக்கும் இடத்தை சேரி என்பர். நாற்பத்தெண்ணாயிரம் முனிவர்கள் யாகம் செய்து, தவம் செய்ததால் பெரிய சேரி- பெருஞ்சேரி என்று பெயர் பெற்றது. (பாடலில் பெருந்தவ முனிவர் என்பது 48,000 முனிவர்களைக் குறிப்பிடுவதாகும்).
சந்திரன், தாரை, சரஸ்வதி, தத்தசோழன் வழிபட்டு பேறுபெற்ற தலம் ஆகும். மேலும் குரு விசேஷ தலம் ஆகும்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறையின் நடுநாயகமாக விளங்குகிறது மாயூரநாதர் திருக்கோவில். உமாதேவி மயில் வடிவில் சிவனை வழிபட்ட தலம் இது. இங்குள்ள சிவகுருவே நான்கு திக்கிலும் நான்கு வள்ளல்களாக அருள்பாலிக்கிறார். வடக்கே வள்ளலார் கோவிலில் கைகாட்டும் வள்ளலாகவும்; கிழக்கே விளநகரில் துறை காட்டும் வள்ளலாகவும்; தெற்கே பெருஞ்சேரியில் வாக்கு நல்கிய வள்ளலாகவும்; மேற்கே மூவலூரில் வழிகாட்டும் வள்ளலாகவும் திகழ்கிறார்.வாக் என்ற சொல் பிரகஸ்பதியை குறிக்கும் அதனால் பிரகஸ்பதி வழிபட்ட ஈஸ்வரர் என்பதால் வாக்-ஈஸ்வரர் என ஒரு பொருளும் கொள்ளலாம்.
வியாழன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்து , தான் ஞானம் பெறவேண்டும்; மனம் சாந்தி பெறவேண்டும்; தேவர்களுக்கெல்லாம் குருவாகும் பேறு பெற வேண்டும்'' என வரம் கேட்டார்.இறைவனும் மனமிரங்கி, ""மயிலாடுதுறைக்கு தென்பால் தாருகாவனத்தில் லிங்கம் நிறுவி வழிபாடு செய் அங்கு வந்து அருள் செய்வேன் என்று வாக்கருளினார். அதன்படி வியாழன் தாருகாவனமான பெருஞ்சேரிக்கு வந்து ஞானதீர்த்தம் அமைத்து சுவாமி, அம்பாளை பிரதிஷ்டை செய்து, பல ஆண்டுகள் தவமிருந்து சிவவழிபாடு மேற்கொண்டு, முடிவில் பஞ்சாக்னி ஹோமம் செய்தார். மார்கழி மாதம், பூச நட்சத்திரம், வியாழக்கிழமை ஆகிய மூன்றும் இணைந்த நன்னாளில், வியாழனை தேவர்களுக்கெல்லாம் குருவாக ஈசன் இத்தலத்தில் நியமித்தார்.வியாழன் பெருஞ்சேரியில் தவமிருந்து மெய்ஞ்ஞானம் பெற்றதாலும், இறைவனின் வாக்கு பெற்றதாலும் இத்தலத்து இறைவன் வாக்கு நல்கிய வள்ளல்- வாகீஸ்வரர் என பெயர் பெற்றார். வியாழன் தேவகுருவாக பதவி பெற்ற தலம் என்பதால் சிறந்த குரு பரிகாரத் தலமாக இது விளங்குகிறது.
மருமகனான சிவனை அழைக்காமல் அவமானப்படுத்தி, மற்ற தேவர்களையெல்லாம் அழைத்து யாகம் செய்தான் தட்சன். நியாயம் கேட்கச் சென்ற மகளையும் அவமதித்தான்.கோபம் கொண்ட சிவன் நெற்றிக்கண்ணைத் திறந்தார்; வீரபத்திரர் தோன்றினார். உக்கிரமூர்த்தியான வீரபத்திரருக்கு சினம் பொங்கியது. யாகத்தை அழிக்கத் தொடங்கிவிட்டார். தேவர்கள் ஓட ஆரம்பித்தனர். சந்திரனை காலால் தேய்த்தார். சூரியனின் பல்லை உடைத்தார். அக்னியின் கையை முறித்தார். "அவி உண்டாக்கிய நாக்கினைக் காட்டு' என்று கூறி, அவனது ஏழு நாக்குகளையும் அறுத்தெறிந்தார். எமனையும் பிடித்து தலையை அறுத்தெறிந்தார். குயில் வடிவம் எடுத்தோடிய இந்திரனின் சிறகுகளை சின்னா பின்னமாக்கினார். அஞ்சி ஓடிய நிருதியை "நில்' எனச் சொல்லி, தண்டினால் அடிகொடுத்தார். மழுவினால் வாயுதேவனை தண்டித்தார். முத்தலை சூலத்தால் மோதி குபேரனை தண்டித்தார். இப்படி பலரையும் தண்டித்து வீரபத்திரர் யாகத்தைச் சிதைத்துக் கொண்டிருந்தபோது, பிரம்மதேவன் தனது மனைவி சரஸ்வதியுடன் அகப்பட்டுக் கொண்டார்.பிரம்மனின் தலையில் இடி விழுந்ததுபோல் குட்டினார். பிரம்மன் பூமியில் விழுந்தார். அருகே நின்ற சரஸ்வதியின் மூக்கினை அறுத்தார். இறுதியாக தன் வாளினால் தட்சன் தலையை அறுத்தார். அது கீழே விழாதபடி தாங்கி அக்னியில் இட்டார்.
சரஸ்வதி பிரம்மனின் சொல்படி . பெருஞ்சேரி வந்து பல ஆண்டுகள் தவமிருந்து வாகீஸ்வர சுவாமியை வழிபட்டாள். சிவபெருமான் சரஸ்வதிமுன் தோன்றி, ""வேண்டும் வரம் கேள்'' என்றார். ""எனது அங்கக்குறை நீங்கவேண்டும். எல்லாருடைய நாவிலும் வாக்கு விருத்தியளிக்கும் பேறை எனக்குத் தந்தருள வேண்டும்'' என்று சரஸ்வதி வேண்ட, அப்படியே இறைவன் அருள் புரிந்தார். சரஸ்வதி இழந்த மூக்கைப் பெற்றாள். வாக்கு வண்மையளிக்கும் பேறையும் பெற்றாள். இப்படி கல்விக்கு அரசியான சரஸ்வதிதேவிக்கு அருள்புரிந்தவர்தான் பெருஞ்சேரி வாகீஸ்வரர்.
எண்ணூறு ஆண்டுகள் பழைமையான இவ்வாலயம் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது, கிழக்கு நோக்கிய திருக்கோயில், சுதைகளுடன் கூடிய நுழைவாயில் உள்ளது. அடுத்து கொடிமரமும், கீழே கொடிமர விநாயகரும் கொடிமரத்தின் முன்னால் நந்தியும் உள்ளது.
அடுத்து மூன்று நிலை ராஜகோபுரமும் அதன் முகப்பில் பதினாறுகால் மண்டபமும் உள்ளன. இந்த மண்டபத்தினை முகப்பாக கொண்டு அம்பிகை சன்னதி உள்ளது. இறைவன் கிழக்கு நோக்கி உள்ளார்
லிங்கத்தின் ஆவுடையார் சதுர வடிவில் அமைந்திருப்பதும், விமானம் வட்ட வடிவில் அமைந்திருப்பதும்,கருவறை அரைவட்ட வடிவிலும் உள்ளது. கருவரி சுவற்றில் வியாழ பகவான் இறைவனை வணங்குவதும், அவர் அருகில் சோழ மன்னன் ஒருவரும் அவரது மனைவியும் வணங்குவது போன்று சிற்ப்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
மேற்கு திருமாளிகை பத்தியில் ஞான தீர்த்த விநாயகரும்,பதினைந்து நாகர்கள் சிலைகளும், சந்திரன் வழிபட்ட சோமநாதரும் சோமசுந்தரியும், விசுவநாதர் விசாலாட்சியும் உள்ளனர்.உள்பிராகாரத்தில் சரஸ்வதி தேவி சிவபெருமானை பூஜை செய்யும் சிற்பமும் மிக அற்புதமாக அமைந்துள்ளது. கிழக்குப் பிராகாரத்தில் நான்கு யுகங்களைக் குறிக்கும் நான்கு பைரவர் திருமேனிகள் உள்ளன. குரு தோஷம் உள்ளவர்கள், குரு பலம் வேண்டுவோர், திருமணத் தடை, புத்திர தோஷம் நீங்க விழைவோர், வம்ச விருத்தி, பதவி உயர்வு வேண்டுவோர் வழிபட வேண்டிய உன்னத தலங்களில் ஒன்று பெருஞ்சேரி.
"ஆசை நிறைவேறணும்னா பூசத்திலே வழிபாடு செய்' என்ற பொன்மொழிக்கேற்ப, ஜாதகம் இல்லாதவர்கள்கூட பூச நட்சத்திர நாளில் இங்குள்ள சிவகுருவாம் ஆதிகுருவை வழிபட்டால் அனைத்து காரியங்களும் காலதாமதமாகாமல் நடந்து தடையின்றி வெற்றிகிட்டும். இப்படி பல்வேறு சிறப்புக்கள் கொண்ட இத்தலம் உங்களுக்கு எல்லா நன்மைகளையும் வழங்க காத்திருக்கிறது. அன்புடன் வரவேற்க திருக்கோயில் அன்பர்கள் காத்திருக்கின்றனர்..
இறைவன்-வாகீஸ்வரர்
இறைவி- ஸ்வந்தரனாயகி
Nearby cities:
Coordinates:   11°2'11"N   79°39'42"E

Comments

This article was last modified 7 months ago