sree vilvavanEswarar temple, nallur , nalloor (Nallur)

India / Tamil Nadu / Virudhachalam / Nallur / Vridachalam - Vepppur road
 temple, Shiva temple
 Upload a photo

TVT238 nalloor - might be nalloor or nallur thEvAra vaippu temple, near viruthAchalam.'பொய்கை நாட்டுத் திருவையாறு' என் றொரு கல்வெட்டுச் செய்தி உள்ளதால், பொய்கை நல்லூர் என்பதை பொய்கை, நல்லூர் என இரு தலமாக கொள்ளலும் பொருந்தும் - shaivam.org/siddhanta/spvtalam.htm)
சோழர் காலத்தில் பெரும்பன்மையான கிராமங்கள் "நல்லூர்" என்றே அழைக்கபட்டுவந்துள்ளது.

விருத்தாசலம் -வேப்பூர் சாலையில் சென்று கண்டப்பங்குறிச்சி சென்று வடக்கில் நான்கு கிமி செல்லவேண்டும்.அவ்வாறு அமைந்த நல்ல ஊர்களில் கடலூர் மாவட்டம் நல்லூரும் ஒன்று ஆகும். இதுவே இவ்வூருக்கு தனி சிறப்பு தருவது மற்றும் மூன்று நதிகள் கூடுமிடமாக அமைந்துள்ளது என்பதே.இந்தத் திருத்தலத்தையொட்டி ஆலயத்திற்கு வடபுறம் மணிமுத்தாறு , கோமுகி நதியும் கிழக்கு நோக்கி பாய்கின்றன . ஆலயத்திற்கு முன்புறம் மயூரநதி கிழக்கு நோக்கி பாய்ந்து ஆலயத்தின் முன்பாக மூன்றும் கூடிடும் சிறப்பு கொண்ட தலம் நல்லூர்.
நல்லூர் வில்வவனேஸ்வரர் ஆலயம் மூன்று ஆறுகள் சந்திக்கும் இடத்தின் நடுவில் மேட்டுப் பகுதியான இடத்தில வட மேற்கே அழகுற அமைந்துள்ளது திருக்கோவிலில் கருவறை,அர்த்தமண்டபம் , மகாமண்டபம் ,முகமண்டபம்.
மகா மண்டபம்:இம்மண்டபம் சோழர்கால தூண்களை கொண்டுள்ளது ,தூண்களில் வடக்குபுறம் ஒரு தூணில் கல் வெட்டு காணப்படுகிறது.
"ஸ ஸ் ஸ்ரீ தனித்த யாண்ட பஞ்சசதி தகன அறுபடையான சுந்தரபட்ட நானதில்லைநாயக வேளான் "என்று வெட்டப்பட்டுள்ளது , சுந்தர பட்டனான தில்லை நாயக வேளான் கட்டி வைத்த மண்டபக இருக்ககூடும் , தூண்களும் மண்டப அமைப்பும், கட்டடக் கலைத்திறனும் ஒப்பு நோக்கும் போது இவை சோழர் காலத்திய கலை முறை என்பதை உணர முடிகிறது. மேலும் இம்மண்டபம் மூன்று பக்கங்களிலும் திறந்த நிலையிலும் ,விதானத்தில் மீனின் பெரிய உருவமும் செதுக்கப்பட்டுள்ளது .
கல்வெட்டுக்களை ஒப்புநோக்கும் போது இங்கு சோழர்களும், பாண்டியர்களும்,விசயநகர மன்னர்களும் இப்பகுதியை தங்கள் ஆளுகையின் கீழ் அரசாண்டாமை புலனாகின்றது.இவற்றில் இக்கோயில் மூலத்தானம் முதல் மகா மண்டபம் வரையில் சோழர்கால கலைப்பணியாக திகழ்கின்றது. கோபுரம் ,முக மண்டபம் பிற பிற்க்காலத்திய பணிகளாக தோன்றுகிறது.ற அமைப்புடன் அமையபெற்றுள்ளது.நுழைவு வாயிலில் கோபுரமும், முன்மண்டபங்களும்,
திருமண மண்டபம் காணப்படுகிறது .நந்தி மண்டபம் இறைவனை நோக்கி எழுப்பட்டுள்ளது .
இறைவன் கிழக்கு நோக்கியும் அவரது இடது புறத்தில் அம்பிகையும் கிழக்கு நோக்கி தனி கோயில் கொண்டுள்ளார். இங்கு முருகனும் வடக்கு நோக்கிய சன்னதியில் பெரிய திருஉருவமாக உள்ளார். இது இக்கோயிலின் மற்றொரு சிறப்பு.
முருகன் அசுரர்களை அழித்தபோது வீரகத்தி தோஷம் பீடித்தது, அதனை போக்க முருகன் இந்த முக்கூடலில் வந்து இறைவனை வழிபட்டு பேறுகள் பெற்றதாக ஐதீகம். கருவறை சுற்றி சுற்றாலை மண்டபங்கள் உள்ளன அதில் அறுபத்து மூவர் உள்ளனர். பின் புறம் பிராண தியாகர் லிங்கமும், தண்டபாணி, லட்சுமி நாராயணர், மகாலட்சுமி உள்ளனர்.
கருவறை கோட்டங்களில் விநாயகர், தென்முகன், மாதவபெருமாள், பிரமன், துர்க்கை உள்ளனர் அது போல் இறைவியின் கருவறை சுற்றி ஞானசக்தி, கிர்ரியாசக்தி, பிரம்மா சக்தி என சிலைகள் உள்ளன. இறைவியின் முகப்பு மண்டபம் ஒட்டி வீரபத்திரர் தெற்கு நோக்கியுள்ளார்.
இறைவியின் எதிரிலும் இறைவனின் எதிரிலும் தனி தனி கொடிமரங்கள் உள்ளன. வடகிழக்கில் நவகிரகம், பைரவர், சூரியன் உள்ளன.
இறைவன்- வில்வனேஸ்வரர்
இறைவி- பிரகன்னாயகி
Nearby cities:
Coordinates:   11°34'28"N   79°11'21"E
This article was last modified 6 years ago